திருச்சி, செப்.22- “பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழா திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெகு விமரிசை
யாக கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு தலைமையாசியை, ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவியர்கள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவரும் சமூக நீதி நாள் (17.09.2025) உறுதிமொழியை சிறப்புடன் ஏற்றனர். மாணவிகள் மரக்கன்று களை நட்டு, தங்களின் மகிழ்வை வெளிப்படுத்திக் கொண்டனர்.