ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கில் பங்கேற்ற கனேஸ்வர், தான் வாசித்த ஆய்வுரையின் நகலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். இவர் அய்தராபாத் பல்கலைக்கழகத்தில், “PERIYAR’S ENGAGEMENT WITH LANGUAGE AND CULTURE” எனும் தலைப்பில் முனைவர் பட்டக் கல்வி பயில்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. உடன் சுப்பிரமணியம் – மாலா. (சென்னை, 19.09.2025)
பாபநாசம்-இரும்புத் தலை கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் சிவாஜி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதன் மகிழ்வாக இயக்க நன்கொடையாக ரூ.2000 வழங்கினார். (17.9.2025, சென்னை).
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை “தினசக்தி” நாளிதழ் ஆசிரியர் – இயக்குனர் கோமாபுரம் இராப.சந்திர சேகர் சந்தித்து பயனாடை அணிவித்து நலம் விசாரித்தார். (19.9.2025, சென்னை)
தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல், திருச்செங்கோடு பகுதித் தோழர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (சென்னை, 19.09.2025)
எழுத்தாளர் மணா தன்னுடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ஊடகத்துறை பயணக்குறிப்புகளின் தொகுப்பாக எழுதிய, “ஊடகம் யாருக்கானது?” எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 19.09.2025)