சென்னை, செப். 21– எல்.அய்.சி. பிற்படுத்தப் பட்டோர் நலச் சங் கத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல அலு வலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பிற்படுத் தப்பட்டோர் நலச் சங்கத்தின் நிர்வாகிகளும், எஸ்.சி./எஸ்.டி. நலச் சங்கத் தின் நிர்வாகிகளும், ஊழி யர்களும் திரளாக கலந்து கொண்டனர். சென்னை கோட்டம் ஒன்றின் பொதுச் செயலாளர் முரளி நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார்.
கோட்டம் ஒன்றின் துணைத் தலைவர் கோடீஸ்வரன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வரவேற்று பேசினார். தென் மண்டல துணை தலைமைப் பொறி யாளர் சுந்தர்ராஜன் தந்தை பெரியார் அவர் களின் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை யாற்றினார்.
நிகழ்ச்சியில் உரை யாற்றிய நிர்வாகிகள், இன்றைய காலகட்டத்தில் மதவாத சக்திகளும், மனிதர்களை பிரித்தாளும் பிரிவினைவாத சக்திகளும் தமிழ் நாட்டில் காலூன்ற முடியாமல் இருப்பதற்கு தந்தை பெரியாரின் தத்து வங்கள் அருமருந்தாக இருப்பதை விளக்கி பேசினார்கள்.
சமூக நீதிக்கான உறுதி மொழியினை தோழர்கள் உரத்துக் கூறி , நிறைவேற்ற உறதி பூண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட் டது. சென்னை கோட்டம் ஒன்றின் பொருளாளர் சந் தானம் நன்றி கூறினார்.