கோவை, செப். 21– கோவை ஆற்றுப்பாலத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மாலை 6 மணி அளவில் நடை பெற்றது.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
விழாவில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெரியார் சிலையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் ம.சந்திர சேகர் வரவேற்புரை வழங்கினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கோவை மாவட்ட கழக செயலாளர் ஆ.பிரபாகரன், மற்றும் கோவை கு.இராமகிருட்டிணன், விசிக மாவட்ட செயலாளர் ஸ்டிபன் சுந்தர், திமுக மாநில மாணவரணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி, மற்றும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ரவி, துணை மேயர் வெற்றி செல்வன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் ஏராளமான திமுக பொறுப்பாளர்கள், திராவிடர் கழகத்தின் கோவை மாவட்ட மாநகர பகுதி கழக ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி தோழர்கள் மற்றும் நீலமலை,மேட்டுப்பாளையம், கணியூர், கோபி, பொள்ளாச்சி கழக மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.