டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அய்தராபாத் ஜூபிலி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு தகவல்.
தி இந்து:
* அதானி மீதான 24 குற்றச்சாட்டுகளில் இரண்டில் மட்டுமே செபி குற்றம் இல்லை என கூறியுள்ளது. அதானி குழுமத்தால் நடந்ததாக கூறப்படும் “மோசடி” குறித்து அனைத்து பரிமாணங்களிலும் விசாரணைகளைத் தொடர வேண்டிய அவசியம் இருப்பதாக காங்கிரஸ் புகார்.
* “என் அன்பான மோடிஜி மற்றும் அமித் ஷாஜி, ஒரு காலத்தில் உங்கள் தலைவர் எல்.கே. அத்வானியை பீகாரில் கைது செய்த லாலுவின் [பிரசாத்] மகன் நான் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் வெற்று அச்சுறுத்தலுக்கு பயப்படவில்லை. பீகார் மக்கள் எனக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர், அவர்கள் தான் உண்மையான எஜமானர்கள்.” என “தேஜஸ்வி அடுத்த தேர்தலில் போட்டியிட கூடத் துணிய மாட்டார்” என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு தேஜஸ்வி பதிலடி.
* வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அவருடைய சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஷ்டாக்கிற்கு அழைப்பு; கருநாடக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி. மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ். சுரேஷிடம், “இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை என்ன கூறுகிறது?” என்று நீதிபதி விக்ரம் நாத் கேட்டார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உத்தரகாண்ட் பாஜக அரசின் சாதனை? பள்ளியில் மணி அடிக்கும் பணியில் ஈடுபட்ட ராஜூ கிரி, அப்பள்ளியின் தற்காலிக முதல்வராக நியமனம்.
தி டெலிகிராப்:
* மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அண்மைக்கால வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் பதில், “ஒரு பெரிய துப்பாக்கிச் சூடு முயற்சி நடந்தது, ஆனால் யாரும் இறக்காததால், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையோ அல்லது அவர்களின் வலையமைப்பையோ கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறுவது போல் உள்ளது என்று மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் விமர்சனம்.
– குடந்தை கருணா