சென்னை செப். 20- சென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு. உதவி உபகரணங் களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மாற்று திறனாளிகளுக்கு உதவி கருவிகள்
சென்னை பெட்ரோ லியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறு வனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், பேட்டரியால் இயங்கும் 4 சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் 18.9.2025 அன்று நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகு தியில், கழிவுநீரகற்று பணி மேற் கொள்வதற்காக, ரூ.1.50 கோடி மதிப்பில் நவீன இயந்திரம் பொருத் தப்பட்ட கழிவுநீரகற்று வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளை மாற்றத் துக்கான திறனாளிகளாக நம் முதல் வர் உயர்த்திக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில், மாற்றுத் திறனாளி களை உள்ளாட்சி அமைப்புகளில், நிய மன முறையில் தேர்ந்தெடுக்க வேண் டும் என்ற கோரிக்கையை ஏற்று. அதற் கான அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம், 15 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக் கான பராமரிப்புத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் நடைபெறுகின்ற விளை யாட்டுப் போட்டிகளில் பங் கேற்க இதுவரை 200 மாற்றுத் திற னாளிகளுக்கு. தமிழ்நாடு சாம் பியன்ஸ் அறக்கட்டளை மூலம். ரூ.5 கோடி வரை நிதி வழங்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 200 வீரர்களுக்கு ரூ.25 கோடி பரிசுத் தொகை, கடந்த ஆண்டில் 5 மாற்றுத் திறனாளி விளை யாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விளையாட்டுத் துறை மூலமாக 20 பேருக்கு அரசு வேலை வழங்க நடப் பாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்