திருப்பத்தூர், செப். 20- தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட கழக அலுவலகத்தில் பெரியார் பற்றிய கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி 13.09.2025 காலை 9.30மணியளவில் நடைபெற்றது.
இந்த போட்டித் தேர்வை மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தொடங்கி வைத்தார். இந் நிகழ்வு மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன் ஏற்பாட்டிலும், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கோ.திருப்பதி மேற்பார்வையிலும் நடைபெற்றது.
இந்த போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என்று தனித்தனியாக முதல் பரிசாக ரூ. 2000 ,இரண்டாம் பரிசு ரூ1500, மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் 150 மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந் நிகழ்வை அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்) தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்) எம். ஞான.பிரகாசம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) எம்.என்.அன்பழகன் (விடுதலை வாசகர் வட்ட அமைப் பாளர்) வெ.அன்பு (மாவட்ட தலைவர் ப. க), பெ.ரா. கனகராஜ் (கந்திலி ஒன்றிய தலைவர்) இராஜேந்திரன் (அமைப்பாளர் சோலையார்பேட்டை), இரா. நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்) கா. மோகன், பன்னீர், இரா. கற்பகவள்ளி (மாவட்ட தலைவர் மகளிரணி) குமரவேல் (மாவட்டபகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்) க. முருகன் (தொழிலாளரணி) க. இனியவன், க. உதயவன் (மாணவர் கழகம்) இசைபிரியன் (மாவட்ட இளைஞரணி) ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் தேர்வை கண்காணித்தனர். காலை முதல் மாலை வரை போட்டித் தேர்வு நடைபெற்றது. போட்டியில் பங்கேற்று வெற்றிபெறுபவர்களுக்கு 27.09.25 அன்று மாலை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.