திருச்சி, செப். 20- 13.09.2025 அன்று காலை 11 மணியளவில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் என் .எஸ் கலைவாணர் அரங்கில் குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு, யூத் எக்ஸ்னோரா இன்டெர்நேஷனல், பி எஸ் ஆர் டிரஸ்ட் மற்றும் பாவை பவுண்டேசனுடன் இணைந்து ஜெட்லீ சாதனை புத்தகம் ஒரே நாளில் 4 உலக சாதனைகள் ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்ற நிகழ்ச்சியை குழந்தைகள் நலக்குழு தலைவர் பி.மோகன். டிசிபிஓ (DCPO)-ராகுல் காந்தி, மற்றும் டாக்டர் டிராகன் ஜெட்லீ நிறுவனர் ஜெட்லீ சாதனை புத்தகம்,ஏற்பாடு செய்து நடத்தினர் .இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரியிலிருந்து 999 குழந்தைகள் பங்கேற்றனர் ஒரே நேரத்தில் 4 உலக சாதனை படைத்தனர்,
நான்கு முக்கிய கருப்பொருள் தொடர்பாக ஆவணங்களில் உறுதிமொழி பாடினர், (நாட்டுப்பற்று, போதைப் பொருள் இல்லா சமூகம், சுற்றுச்சூழல், குழந்தை பாதுகாப்பு) சுற்றுச் சூழல் வாசகங்கள் பலகையில் எழுதுதல், குழந்தை உதவி எண் மற்றும் பாதுகாப்பு எண்ணுடன் நண்பர்களுக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்புதல் போன்ற நிகழ்ச் சிகள் குழந்தைகளிடையே நடைபெற்றது .
இதில் தலைமை விருந்தினராக திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ் .செல்வநாகரத்தினம் அய்.பி.எஸ். கலந்துகொண்டார், சிறப்பு விருந்தினராக பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது,
பெண் குழந்தைகளாகிய தாங்கள் சாதனைகள் படைப்பதை பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற அடிமைத்தனத்தை மாற்றி தங்கள் கையில் புத்தகத்தை எடுப்பதற்கு காரணம், தந்தை பெரியார். அவர்தான் இந்த தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர் என்றார் இச்சிறப்புமிக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து விருதுகளை வழங்கினார், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு விருது வழங்கினர் .
மேலும் சிறப்பு விருந்தினராக பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் ஆர் .தங்காத்தாள், திருச்சி குழந்தைகள் நலக்குழு உறுப் பினர்கள் சியாமளா நாத்லிக் டேன் ஆப் பாபு, பவுலின் சோபியாராணி, மருத்துவர் பிரபு, பிரபாகரன் எச்.எஸ்.அரசு. இல்ல கண்காணிப்பு திருச்சி, பாலா முனியாண்டி மூத்த மேலாளர், பாவை பவுண்டேஷன், ஷேக் அப்துல்லா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பி.எஸ்.ஆர். டிரஸ்ட், மருத்துவர் குணசீலன் நிதி அறங்காவலர் பி.எஸ்.ஆர். டிரஸ்ட், மாலினி செயலர் அறங்காவலர் பி.எஸ்.ஆர். டிரஸ்ட். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிலிருந்து ஜெயச்சந்திரன், ஜெயசித்ரா, முத்துமாணிக்கம், பிரிய தர்ஷினி,- சிறீவித்யா, யூத் எஸ்னோரா இன்டர்நேஷனல் சார்பில் விமல் ராஜ் செயலர், கண்ணன் – துணை தலைவர் மற்றும் அனைத்து இல்லம் கண்காணிப்பாளர்கள், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தாமரை, பெரியார் மணியம்மை மகளிர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் வனிதா,மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சி இனிதே 3 மணியளவில் முடி வுற்றது.