19.9.2025
தி இந்து:
* “ஆர்.எஸ்.எஸ் என்பது பதிவு இல்லாமல் இயங்கும் ஒரு சட்டவிரோத அமைப்பு: ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (RSS) ஒரு அரசு சாரா அமைப்பாக (NGO) செயல்படுவது குறித்த தகவல்களை வழங்க நிதி ஆயோக் மறுப்பு. “ஆர்.எஸ்.எஸ் என்பது பதிவு இல்லாமல் இயங்கும் ஒரு சட்டவிரோத அமைப்பு என்பதை ஆர்.டி.அய். பதில் தெளிவுபடுத்தியுள்ளது,” என பானிபட்டைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பி.பி. கபூர் தகவல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* “நீங்கள் நேரடியாக சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என கஜுராஹோ கோயில் விவகாரத்தில் கூறியதற்கு விமர்சனம் வந்த நிலையில், ‘நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்’ என தலைமை நீதிபதி கவாய் பதில்.
* கருநாடகா ஆலந்த் தொகுதியில் 6018 வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கும் நடவடிக்கை, காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்கவே. வாக்குத் திருட்டில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் நேரடியாக முயற்சி செய்கிறார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் பாகல்பூரில் உள்ள அதானி மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு பீகார் காங்கிரஸ் எதிர்ப்பு. முன்மொழியப்பட்ட மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலத்திற்கான ஒப்பந்தத்தில் விவசாயிகள் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராஜேஷ் ராம் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக, இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ நாடான செக்கர்ஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறினார்.
– குடந்தை கருணா