தந்தை பெரியாரின் கருத்துகளை இளம் தலைமுறையினருக்கு கலந்துறவாடி பயிற்சி அளித்திட பெரியார் ஆங்கிலச் சிறகு (Periyar English Wing) சென்னை – பெரியார் திடலில் தொடங்கப்பட்டது

தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாளில் சென்னை பெரியார் திடலில் பெரியார் ஆங்கிலச் சிறகு (Periyar English Wing) என்னும் கொள்கைசார் கலந்துறவாடல் வட்டத் தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 17,9,2025 அன்று தொடங்கி வைத்தார்.

‘பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்’ எனும் நிலையில் சுயமரியாதை பகுத்தறிவு கருத்துகளை உலகமெங்கிலும் கொண்டு செல்லும் வகையில் ஆங்கில வழியில் கருத்து கள் பரப்பப்பட வேண்டும். இளைய தலைமுறையினர் பெரியாரின் கருத்துகளை சரளமாக ஆங்கிலத்தில் கலந்துறவாடும் நிலையினை ஊக்கு விக்கும் வகையிலும், அதற்கான பயிற்சிகளை வழங்குவதிலும் பெரியார் ஆங்கிலச் சிறகு வட்டம் கூட்டங்களை நடத்திடும். மாதம் ஒரு கூட்டம் என்ற அளவில் தொடக்க நிலையில் நடைபெறும்.

தமிழர் தலைவர் துவக்க உரை

Periyar English Wing அமைப்பினைத் தொடங்கி வைத்து ஆங்கிலத்தில் உரையாற்றிய தமிழர் தலைவர் தனது பேச்சில் குறிப்பிட்டதாவது,

“மனிதநேயம் பேணப்பட வேண்டும், மனிதர் அனைவரும் சமம்” என்ற அடிப்படையில் உருவானது தந்தை பெரியாரின் சுயமரியாதை பகுத்தறிவுக் கருத்துகள், மனிதரை மனிதர் இழிவுபடுத்திடும் நிலையை மாற்றிட, இயக்கம் கண்டு சமுதாயப் பணி ஆற்றியவர் தந்தை பெரியார். மனிதம் காக்கப்பட வேண்டும். நிலவில் முதன்முதலாக காலடி வைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது இடது காலைத்தான் முதலில் நிலவில் பதித்தார்; வலது காலை அல்ல. வசதிப்பட்ட காலை வைத்தார். அதில் மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை. அப்பொழுது ஆம்ஸ்ட்ராங் கூறிய குறு ஞ்சொற்றொடர் மிகவும் உன்னதமானது. அமெரிக்க நாட்டவராக அவர் காலடி பதிக்கவில்லை. மனித குலத்தின் பிரதிநிதியாக அவர் கூறியது. ‘‘இது சிறிய அளவிலான முதல் அடியாக இருக்கலாம். ஆனால் மானுடத்திற்கு ஒரு மிகப்பெரிய பாய்ச்சல். (This may be a small step; but great leap for mankind)

Periyar English Wing மானுடத்தை உயர்த்தவல்ல பெரியாரின் தத்து வத்தை உலகளாவிய பரப்பலுக்கு உகந்த வகையில் கொண்டு செல்ல வேண்டுமென விரும்பி, துவக்கி வைத்து, வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ஆசிரியர் குறிப்பிட்டார்.

‘பெரியார் ஆங்கிலச் சிறகு’ வட்டத்தின் பொறுப்பாளர் முனைவர் கோ.ஒளிவண்ணன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, நன்றி கூறினார்.

கூட்டத்தில் சென்னை அரசு திரைப்படக் கல்லூரி முதல்வர் ட்ராட்ஸ்கி மருது, ஆங்கிலப் பேராசிரியர் எம்.ஆர்.மனோகர் வழக்குரைஞர் ஸ்வப்னா மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கழக பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, பெரியார் வலைக்காட்சி இயக்குநர் உடுமலை வடிவேல் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *