மறைமலைநகர், செப். 19– செங்கல்பட்டு மறைமலை நகரில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 18.9.2025 வியாழன் மாலை 5:30 மணிக்கு மறைமலைநகர் சுயமரியாதை மாநாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன் அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கலந்துரையாட லின் நோக்க உரையாற்றினார் .
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமை தாங்கினார். அனைத்து பொறுப்பாளர்களின் கலந்துரையாடலுக்கு பின் தோழர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மேலும் நிதியை சேகரிக்க எல்லோரும் தொடர்ந்து மாநாடு முடியும் வரை சிறப்பாக செயல்பட வேண்டும் செங்கல்பட்டுமுதல் சுயமரியாதை மாநாடு இப்போது எப்படி இவ்வளவு காலம் பேசப்படுகிறதோ அதே போல இன்னும் நூறு ஆண்டுகள் பேசப்படும் விழாவாக செங்கல்பட்டு சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பேசப்படும். ஆகவே அதற்காக சிறப்பாக அனைவரும் செயல்பட வேண்டும் என சிறப்பு உரையாற்றினார்.
கழகத்துணைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட நிதி
சோழிங்கநல்லூர் மாவட்டம் சார்பாக ரூபாய் 70 ஆயிரம், தாம்பரம் சீ.லட்சுமிபதி வசூல் தொகை 5000 மற்றும் 10 ஆயிரம் வசூல் தொகை, செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணி சவுந்தரி கருணாகரன் ரூபாய் 25,000, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ம. நரசிம்மன் ரூபாய் 5000, செங்கல்பட்டு ப.க. மாவட்ட செயலாளர் லோ. குமரன் 10000 ஆக மொத்தம் ஒரு லட்சத்து 22,000 அளிக்கப்பட்டது.
தீர்மானங்கள்
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் லோ.குமரனின் தந்தையார் லோகநாதன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு தீவிரமாக நிதி வசூல் செய்ய அனைவரும் ஒத்துழைப்பு தருவது என தீர்மானிக்கப்பட்டது
அனைவரும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிரமம் பாராமல் மாநாட்டுக்கு தேவையான நிதியை வசூல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது
தாம்பரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு வரை கழகக் கொடிகளை கட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தோர்: சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வே. பாண்டு, பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், சீ.லட்சுமிபதி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, மாவட்ட மாணவர் அணி தலைவர் அ. அருண்குமார், த.பரிதின், செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் அ செம்பியன், மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் செங்கை சுந்தரம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு அருண்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சவுந்தரி கருணாகரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஜே சகாயராஜ், மாவட்ட செயலாளர் லோகுமரன், மாவட்ட துணைச் செயலாளர் பிச்சைமுத்து, மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார், நகர தலைவர் வசந்தன், கழக நகரத் தலைவர் திருக்குறள் வெங்கடேசன், நகர செயலாளர் முடியரசன், மு.அறிவுச்சுடர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துரையை வழங்கினர். இறுதியாக மறைமலைநகர் நகர செயலாளர் திருக்குறள் வெங்கடேசன் நன்றி கூறினார்.