இங்கர்சாலைவிடப் பெரியாருக்குப் பெருமை!

(பன்னாட்டு மனித உரிமைக் கழகத் தலைவரும், நார்வே நாட்டைச் சேர்ந்தவருமான லெவி ஃபிராகல், சென்னையில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டமைப்பு மாநாட்டில் (24.12.1996) உரையாற்றுகையில் குறிப்பிட்டது).

நான் என்னுடைய நாட்டிலே – வீட்டிலே இன்று இருந்திருந்தால் இந்த நாளைக் குடும்பத்தோடு கொண்டாடியிருந்திருப்பேன். ஆனால் இன்றைக்கு உங்களிடையே வந்ததாலே என்னுடைய குடும்பத்தை மட்டுமல்ல; மிகப் பெரிய குடும்பத்தைப் பார்க்கின்ற ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். மக்கள் வெள்ளத்தையே ஒரு குடும்பமாகப் பார்க்கின்றேன். இங்கே என் உடன்பிறப்புகளைக் காண்கிறேன்.

கடந்த 25 ஆண்டுகளாக நான் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மனித நேயம், மானுடம் என்று சொல்லக்கூடிய கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக் கிறேன். ஆனால் நான் 25 ஆண்டுகளாக உலகத்தைச் சுற்றிக் கொண்டிருந்தால்கூட இதுபோல ஒரு பெரிய கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை.

நான் காலையிலே ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அங்கே நான் தந்தை பெரியாரின் தொண்டர்களை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்பதைப் பற்றிக் கூறினேன். நான் பெரியாரைப் பற்றிய சில நூல்களைப் படித்திருக்கிறேன். செய்தித்தாள்களிலே சில செய்திகளைப் படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் இருக்கக் கூடியவர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் பெரியாரின் கொள்கைகள்பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தேன்.

நான் சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்சியிலே போய்க் கொண்டிருந்தேன். அப்படிப் போய்க் கொண்டிருந்தபோது, மிகப் பெரிய நெடுஞ்சாலைக்குப் பெரியார் பெயர் வைத்திருப்பதைப் பார்த்தேன். எனக்குள் வியப்பு. ஒரு பகுத்தறிவாளரின் பெயரை இவ்வளவு பெரிய சாலைக்கு வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. உலகத்திலே நடக்காத ஒரு செயலை இங்கே கண்டேன். இங்கர்சால் அமெரிக்காவின் மிகப் பெரிய சிந்தனையாளர், மிகப் பெரிய நாத்திகர். ஆனால் இங்கர்சாலுக்கு நியூ யார்க் நகரிலே இங்கர்சால் பெயரிலே ஒரு குறுஞ்சாலைக்காவது பெயர் வைக்கமுடியுமா என்று எண்ணிப் பார்க்கிறேன். நடக்கமுடியாத ஒன்று.

லெவி ஃபிராகல்

தந்தை பெரியார் 119ஆம் ஆண்டு பிறந்த நாள்
‘விடுதலை’ மலர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *