
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலைத்திற்கு அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நேரு, இரகுபதி, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், எம்.பி.க்கள் கனிமொழி, துரை. வைகோ, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
