செய்திச் சுருக்கம்

2 Min Read

மழை

வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி யில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 29, 30, 31ஆம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

கூட்டுறவு

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்க ளிலும் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் யுபிஅய் பணப் பரிவர்த்தனை வசதி அறி முகம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணில்

சிறீஅரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ் எல்பி-எஃப்12 ராக்கெட் மூலம் இந்தியாவின் வழிகாட்டுதல் பயன் பாட்டுக்கான என்வி எஸ்-01 செயற்கைக் கோள் நாளை (29.5.2023) காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

மாறுதல் கட்டணம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் உரிமை யாளர்கள் மாறும் போது மாறுதல் கட்டணம் வசூலிக்க வகை செய்யும் குடியிருப்பு சங்க விதியை மாவட்ட பதிவாளர் ரத்து செய்தது சரியானதுதான் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

அலைப்பேசியில்…

கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை குறித்து பொது மக்கள் 8072864204, 9042380581, 9042475097, 6382318480 என்ற அலைப்பேசி எண்கள் மூலம் புகார் அளிக்கலாம் என சென்னை காவல் துறை அறிவிப்பு.

வேண்டுகோள்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவின் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரயில் சேவை ரத்து

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும்  ரயில் சேவை 7 மாதங்கள் செல்படாது என தகவல்.

ஓய்வுபெற்ற

கடந்த ஆண்டில் ஓய்வு பெற்ற 612 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.171.23 கோடி பணப் பலன்களுக் கான காசோலையை நேற்று (27.5.2023) விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பயன்பாட்டுக்கு…

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் அடுத்த மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்.

வாய்ப்பு

பள்ளிக்கல்வித் துறையில் 8 இயக்கு நர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட வுள்ளது. இதையடுத்து ஆணையர் பதவியே ரத்தாகும் நிலையில், மீண்டும் பள்ளிக் கல் விக்கு இயக்குநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ள தாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிகரிப்பு

தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காற் றாலைகளில் மின்சார உற்பத்தி 23,000 யூனிட் ஆக கிடுகிடு வென உயர்ந்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *