டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* லண்டனில் வன்முறையாக மாறிய குடியேற்ற எதிர்ப்புப் பேரணி: காவல்துறையினர் மீது தாக்குதல், 25 பேர் கைது. லண்டனில் தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த பேரணி, சனிக்கிழமை (செப் 13).
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மணிப்பூரில் மீண்டும் வன்முறை:பிரதமர் நரேந்திர மோடியின் நகர வருகைக்கு ஒரு நாள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை மணிப்பூரின் சூரசந்த்பூரில் பிரதமரின் வருகைக்கான தயாரிப்பில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்களை சேதப்படுத்தியதற்காக வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை விடுவிக்க கோரி நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் வன்முறை வெடித்தது.
புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் தேர்தலில் 15-20 இடங்கள் ஒதுக்கப்படா விட்டால் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) 100 இடங்களில் போட்டியிடும் என அக்கட்சியின் புரவலர் ஜிதன் ராம் மஞ்சி, என்.டி.ஏ.க்கு எச்சரிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகார் மருத்துவமனை அவலங்கள்: ‘படுக்கை விரிப்புகள்கள் மாற்றப்படவில்லை, கழிப்பறைகள் அணுக முடியாதவை’: பீகார் அரசு மருத்துவமனையில் தேஜஸ்வி யாதவ் கண்டனம். இது தான் ‘இரட்டை காட்டு ராஜ்ஜியம்’ என விமர்சனம்.
– குடந்தை கருணா