திருச்சி, செப்.14– தஞ்சாவூர் மாவட்டம் உள்ளூர் விளையாட்டு கபடி போட்டியில் 24 ஊர்களில் இருந்து 24 குழுக்கள் பங்கு பெற்றன. 6.9.2025 அன்று வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் குழு பங்கு பெற்று மூன்றாவது பரிசு பெற்று கோப்பையை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தது.
வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த பள்ளி சிலம்பம் பயிற்சியாளர் பிரியதர்ஷன், உடற்கல்வி ஆசிரியை நித்யா ஆகிய இருவரையும் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். 9.9.2025 அன்று காலை வணக்கக் கூட்டத்தில் பரிசுப் பெற கடினமாக உழைத்த சிலம்பம் பயிற்சியாளர் பிரியதர்ஷன், உடற்கல்வி ஆசிரியை நித்யா ஆகியோர் முன்னிலையில் முதல்வர் பரிசுப் பெற்ற மாணவர்களுக்குக் கோப்பையை வழங்கி சிறப்பித்தார்
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி
மண்டல அளவிலான முதலமைச்சர்
கோப்பை ஜூடோ போட்டியில் பரிசு
திருச்சி, செப்.14– 8.9.2025 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2025 திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் கோப்பை ஜூடோ போட்டியில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு யோகா சிறீ ஒன்பதாம் வகுப்பு ஆர்த்தி ஏழாம் வகுப்பு கவுஷிக் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். போட்டியில் ஆர்த்தி மற்றும் யோகசிறீ இரண்டாம் பரிசு பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளன. பரிசு பெறுவதற்கு கடினமாக உழைத்த பள்ளி சிலம்பம் ஆசிரியர் பிரியதர்ஷன், உடற்கல்வி ஆசிரியை நித்யாவையும் மனமுவந்து பாராட்டியவர்கள் பள்ளி தாளாளர் முதல்வர், ஆசிரியர் பெருமக்கள், அலு வலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள்.
9.9.2025 அன்று காலை வணக்கக் கூட்டத்தில் பரிசுப் பெற கடினமாக உழைத்த சிலம்பம் பயிற்சியாளர் பிரியதர்ஷன், உடற்கல்வி ஆசிரியை நித்யா ஆகியோருக்கு, முதல்வர் அவர்களால் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.
.