கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தப்படா விட்டால், அந்த கைபேசியை (மொைபலை) முடக்கும் வசதியை கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க உள்ளது. இதற்காக, கடனில் வாங்கப்படும் கைபேசியில் செயலி ஒன்று நிறுவப்படும்.
இதன் மூலம், கடனை திருப்பி செலுத்தாதவர்களின் கைபேசியை நிதி நிறுவனங்கள் முடக்க முடியும். அதேவேளையில், நுகர்வோர்களின் ஒப்புதலுடனே இந்த செயலி கைபேசியில் நிறுவப்படும். மேலும், கைபேசியில் உள்ள நுகர்வோர்களின் தனிப்பட்ட தரவுகளை நிதி நிறுவனங்கள் அணுக முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.