உதயமானது ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’

2 Min Read

சென்னை, செப்.13 தமிழ்நாட்டில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக் கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும்  உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாட்டில் முந்திரி உற்பத்தி, முந்திரித் தொழிற்சாலைகளின் தேவையை முழுமையாக பூா்த்தி செய்யும் வகையில், முந்திரி சாகுபடி, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது.

கடலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வாரியத் துக்கு, வேளாண்மை மற்றும்  உழவா் நலத்துறை அமைச்சா் தலைவராகவும், அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி துணைத் தலைவராகவும் செயல்படுவார். வேளாண் உற்பத்தி ஆணையா், அரசு செயலா் உறுப்பினா் செயலாகவும், தோட்டக்கலைத் துறை இயக்குநா் என வேளாண்மை தொடா்பான பல்வேறு துறைகளை சாா்ந்த பிரதிநிதிகள் அடங்கிய நிா்வாகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் நியமிக்கப்படும் 2 முன்னோடி முந்திரி விவசாயிகள் மற்றும் 2 முந்திரி பதப்படுத்தும் தொழில் பிரதிநிதிகள் ஆகியோரும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், முந்திரி தொழிலாளா்களின் நலன் காத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருண் மைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப வாரியத்தின் நிா்வாக குழு கூட்டம் நடத்தப்படும்.

வாரியத்தின் நோக்கம்

தமிழ்நாடு முந்திரி வாரியத்தின் மூலம், முந்திரி சாகுபடி, அறுவடை மற்றும் மதிப்புக் கூட்டுதல் தொடா்பான புதிய வேலை வாய்ப்புகள் பெருகும். மேலும், உழவா்களின் தேவைக்கேற்ப அதிக மகசூல் தரும் புதிய ரகங்கள், உரிய இயந்திர தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து உரிய ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

உலக அளவில் உள்ள அதிக மகசூல் தரும் ரகங்களின் நடவுச்செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குதல், முந்திரிப் பயிா் தொடா்பான தொழில்நுட்பங்களுக்கு செயல் விளக்கம் அளித்தல், உழவா்களின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களைப் பிர பலப்படுத்த பயிற்சிகள் வழங்குதல், முந்திரி பதப்படுத்தும் நிலையம் அமைத்தல் தொடா்பான நிதியுதவி மற்றும் திட்டங்கள் குறித்து உரிய ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் இந்த வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இதன் மூலம் முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பயன்பெறு வதுடன், முந்திரித் தொழில் மேம்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *