வெண்தாடி வேந்தரை இதயத்தில் சுமந்து அமெரிக்காவின் பல நகரங்களில் ‘பெரியாருடன் ஓடுவோம், நடப்போம்’ என்று குடும்பங்களாகப் பலரும் கலந்து கொள்கின்றனர். தந்தை பெரியாரின் படம், பொன்மொழி தாங்கிய சட்டை அணிந்து அனைவரும் பங்கேற்பதை கண்கொள்ளாக் காட்சியாகக் காணலாம். பெரியார் பன்னாட்டமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவின் பல நகரங் களிலும் நடக்க உள்ளது. இதை உலகெங்கும் பெரியார் பற்றாளர்கள் நடத்த ஆவலுடன் உள்ளனர்.
அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிப்போம்!
ஆங்காங்கே நடத்துங்கள்! சான்றிதழ் தருகின்றோம்!
– பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா