குமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., அய்.அய்.அய்.டி., என்.அய்.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித் தொகை
அதாவது மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணவரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவி தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகைக்கு 2025-2026-ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-schemes என்ற இணையதள முகவரியில் இருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பதினை பரிந்துரை செய்து ஆணையர் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம்- எழிலகம் இணைப்பு கட்டிடம், தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணபங்களை
30-9-2025-க்குள் மற்றும் புதியது விண்ணப்பங்களை
31-10-25-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் உடற் கூராய்வு அறிக்கை தர திட்டம்
சென்னை, செப்.12 உடற்கூராய்வு அறிக்கையை இணைய வழியில் (ஆன்லைன்) பதிவிறக்கம் செய்யும் வசதியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் தாமதத்தை தவிர்க்க இணைய வழியில் பதிவிறக்கம் செய்வதை அமல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கை 24 மணி நேரத்துக்குள் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்படும். இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்படும் அறிக்கையை நீதிமன்றம், காவல்துறையினர் மட்டுமே பதிவிறக்கம் செய்யலாம். பாதுகாப்பு கருதி இறந்தவர்களின் குடும்பத்தினர் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.