சாலியமங்கலம், செப்.12- தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் சுயமரியாதைச் சுடரொளி வழக்கு ரைஞர் த.முத்தப்பா-மல்லிகா என்கிற அறிவுக்கண்ணு ஆகியோரின் செல்வன் மு.அலெக்ஸ் என்கிற ராஜசிம்மதுரைக்கும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் இராராமுத்திரைக்கோட்டை இராமன்-சாந்தி ஆகியோரின் செல்வி இரா.காவியாவிற்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா 7.9.2025 சாலியமங்கலம் வி.ஆர். மகாலில் நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை யேற்று மணவிழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் கழக வழக்குரைஞர் அணி மாநில தலைவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் த.வீர சேகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
தஞ்சை மகப்பேறு மருத்துவர் தமிழ்மணி, திராவிடர் கழக ஒன்றிய தலைவர் கி. ஜவகர் ஒன்றிய துணைத் தலைவர் சொ.உத்திராபதி, பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை,மாவட்ட துணைத் தலைவர் ஜெ.பெரியார்கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் வை. ராஜேந்திரன், சாலியமங்கலம் நகரத் தலைவர் துரை.அண்ணாதுரை, சாலியமங்கலம் செயலாளர் மா.சுடரொளி,திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ். குமார், திமுக வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ஏ.எஸ்.மூர்த்தி, தஞ்சை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. .கே.ஜி.நீலமேகம் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவஹிருல்லா, தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் இரா. வீரக்குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், தஞ்சை விடுதலை வாசகர் வட்ட புரவலர் டாக்டர் அருமைக்கண்ணு, தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் உள்ளிட்ட ஏராளமான உறவினர்கள் நண்பர்கள் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் பகுத்தறி வாளர் கழக ஒன்றிய செயலாளர் துரை.தம்பித்துரை நன்றி கூறினார்.