மனுதர்மத்தை மாய்த்து, மனிதநேயத்தை வளர்ப்பதில் உறுதி கொண்டுள்ள
‘திராவிட மாடல்’ அரசை ஒழிக்கத் துடிப்பதற்கு ஸநாதன வெறியே முக்கிய காரணமாகும்!
சென்னை, செப்.12 மனுதர்மத்தை மாய்த்து, மனிதநேயத்தை வளர்ப்பதில் உறுதி கொண்டுள்ள ‘திராவிட மாடல்’ அரசை ஒழிக்கத் துடிப்பதற்கு ஸநாதன வெறியே முக்கிய காரணமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘சாதிப் பெருமை’’ – (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூல் அறிமுக விழா, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், நேற்று (11.9.2025) மாலை 6.30 மணிக்கு சென்னை – பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நூல் அறிமுக விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ‘சாதிப் பெருமை’ மொழி ஆக்க நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் நூல் மற்றும் நூலாசிரியர் பற்றிக் குறிப்பிட்டு அறிமுக வுரையாற்றினார்.
தமிழர் தலைவர்
நூலினை வெளியிட்டார்
‘சாதிப் பெருமை’ – (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூலினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளி யிட்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
‘கேஸ்ட் பிரைட்’ (Caste Pride) ஆங்கில நூலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளி யிட்டார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் மலேசிய பொறுப்பாளர் முனைவர் கோவிந்தசாமி நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
மனு தர்மத்தின் படைப்பான ஜாதி இந்திய மக்களிடம் செலுத்தி வரும் ஆதிக்கத்தைத் தோலுரித்துக் காட்டுகின்ற ‘‘Caste Pride’’ ஆங்கில நூலின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான மனோஜ் மிட்டா, ஆங்கில நூலினை ‘சாதிப் பெருமை’’ என சிறப்பான வகையில் தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர் ஆகி யோர் ஏற்புரையாற்றினர்.
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பாராட்டுரை
இவ்விழாவில் பாராட்டுரை வழங்கிய எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்கள், ஜெர்மனிக்குச் சென்று இலண்டன் சென்றடைய திட்டமிட்ட தனது பயணத் திட்டத்தில் நூலின் சிறப்பினை உளமாற உணர்ந்தமையால் ஜெர்மனி பயணத்தைத் தவிர்த்து நூல் அறிமுக விழாவில் மிகவும் மிகழ்ச்சியுடன் பங்கேற்ப தாகக் குறிப்பிட்டார்.
‘திராவிட அரசியலைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவும், திராவிடர் கழகத்தின் சமூகப் பணிக்கு ஒரு முன்னோட்டமாகவும், ஆழமான ஆய்வின் அடிப்படையில் அமைந்து, ஸநாதனத்தின் கொடூரத்தைப் படம் பிடித்துக் காட்டுவது இந்நூலின் சிறப்பாகும்.
ஜாதிய வன்கொடுமையைப்
புரிய வைக்கின்ற நூல்
‘சாதிப் பெருமை’ நூல் விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான ஜாதிய வன்கொடு மைக்கு சரியான பதிலடியைத் தருகின்ற வகையில் ஆழமானத் தரவுகளைக் கொண்டுள்ளது. அய்தராபாத்தில் பிறந்தாலும், பெரியாரிய மாணவர் ஒருவ ரின் ஏழாண்டு கால உழைப்பினால் செம்மை யாக நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் ஸநாதன ஹிந்து மத ஜாதிய சார்பான எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிரான, மாறான திராவிட அரசியல் இன்றியமையாதது என்பதை இந்நூலைப் படிக்கின்ற பொழுது புரிந்து கொள்ள முடியும்’ என்று குறிப்பிட்டு விளக்கமாக உரையாற்றினார்.
நிறைவாக, கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மனிதநேயத்தை வளர்க்கின்ற
‘திராவிட மாடல்’ ஆட்சி!
தமிழர் தலைவர் ஆசிரியர் தமது சிறப்புரையில், ‘‘ஜாதி ஒழிப்புக்கு, ஸநாதனம் மாய்க்கப்படுவதற்கு ஏதுவான போர்க் கருவியாக இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆதரவோடு, ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஸநாதனத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்குப் பல்வேறு காரி யங்களைத் திட்டமிட்டு செய்து வருகிறது.
மனுதர்மத்தை மாய்த்து, மனிதநேயத்தை வளர்ப்பதில் உறுதி கொண்டுள்ள இந்தத் ‘திராவிட மாடல்’ அரசை ஒழிக்கத் துடிப்பதற்கு ஸநாதன வெறியே முக்கிய காரணமாகும்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என மூன்று குழல்கள் இணைந்திருப்பது பொறுக்காது, அலறித் துடிக்கின்றார்கள் இன எதிரிகள். இந்த மூன்று குழல்கள் மட்டுமல்ல, தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியே வெற்றிக் கூட்டணியாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்லில் வாகை சூடப் போவது உறுதியென குறிப்பிட்டார். (முழு உரை பின்னர் ‘விடுத லை’யில் வெளிவரும்)
தமிழர் தலைவர்
சால்வை அணிவித்து சிறப்பித்தார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., ‘சாதிப் பெருமை’ நூலின் ஆசிரியர் மனோஜ் மிட்டா, நூலினை மொழி பெயர்த்த ஆர். விஜயசங்கர் ஆகியோருக்குச் சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.
சிறப்பு விலையில் நூலினைப்
பெற்றுக் கொண்டனர்
‘சாதிப் பெருமை’ நூலின் விலை ரூ.899 ஆகும். நூலின் அறிமுக விழாவினை முன்னிட்டு அந்நூல் ரூ.800க்குத் தரப்பட்டது. சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் இமையம், மாநில கழக கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் அதிரடி அன்பழகன், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், துணைத் தலைவர் வேல்.சோ. நெடுமாறன், மயிலாடுதுறை கி. தளபதிராஜ், அயன்புரம் சு. துரைராசு, சி. வெற்றிச்செல்வி, ச. இன்பக்கனி, தங்க. தனலட்சுமி, செ.பெ. தொண்டறம்,
த.மரகதமணி மற்றும் கழகப் பொறுப்பா ளர்கள், வி.சி.க. தோழர்கள் வரிசையாக வந்து உரிய விலை கொடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து நூலினைப் பெற்றுச் சென்றனர்.
இவ்விழாவில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சா.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
பங்கேற்றோர்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ. சுரேசு, புலவர் பா. வீரமணி, கழகப் பொதுக் குழு உறுப்பினர் தாம்பரம் சு. மோகன்ராஜ், குணசேகரன், ஆவடி மாவட்ட காப்பாளர் பா. தென்னரசு, பூவை தமிழ்ச்செல்வன், கழக சொற்பொழிவாளர் தேவ. நர்மதா, கோ. தங்்கமணி, கோவீ. இராகவன், சி. பாசுகர், சீ. இலட்சுமிபதி, பெரியார் மாணாக்கன், ஜெ. ஜனார்த்தனம், மு. இரா. மாணிக்கம், சி. செல்லப்பன் மற்றும் ஏராளமான திராவிடர் கழக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களும், கல்வியாளர்களும் வழக்குரைஞர்கள் மற்றும் பொது மக்களும் அரங்கம் நிரம்பிட விழாவில் பங்கேற்றனர்.
விழாவின் நிறைவாக மாநில ப.க. தலை வர் இரா. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.