சென்னை,மே30 – இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான ஜெட்ரோவின் தலைவரிடம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2024 ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், அதிக முதலீடுகளை ஈர்க் கும் விதமாகவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் முதலீட்டாளர்களை அவர் சந்தித்து வருகிறார். டோக்கியோ வில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) தலைவர் இஷி குரோ நொரிஹிகோ, செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (29.5.2023) சந்தித்தார்.
அப்போது, முதலமைச்சர் பேசியதாவது:
இந்தியாவுடன் இணைந்து ஜெட்ரோ மிக சிறப்பாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் ஜப்பான் நிறுவ னங்கள் தங்கள் வர்த்தக செயல் பாடுகளை எளிதில் மேற்கொள்ள முக்கியப் பங்கை ஆற்றி வந்துள்ளது. அதற்கு நன்றி. இதை மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆட்டோ மொபைல், கனரக பொறியியல் உள் ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
‘தொழில் 4.0’ என்பதை நோக்கி தமிழ்நாட்டில் உள்ள அதிக அளவி லான சிறு,நடுத்தர தொழில் நிறுவனங் களை முன்னேற்ற, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப திறன்களும், ஜப்பானின் உற்பத்தி நிபுணத்துவமும் உதவும். இதுபோன்ற துறைகளில் நாம் ஒன்றி ணைந்து செயல்பட முடியும் என நம்பு கிறேன்.
மேம்பட்ட உற்பத்திக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குபவர்கள் ஜப்பா னியர்கள். தமிழ்நாட்டில் திறன்மிகுந்த மனிதவளம் உள்ளதால் ‘4.0’ போன்ற தொழில்நுட்ப தேவைகள் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு மய் யத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மேலும் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற் கொள்ள வேண்டும். சென்னையில் 2024 ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வர வேண்டும். இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்றார்.
ஜெட்ரோ தலைவர் இசிகுரோ நொரிஹிகோ கூறும்போது,
‘‘தமிழ்நாட்டில் முதலீடு மேற் கொள்ள ஜப்பான் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும், ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதர வுக்கும் நன்றி. சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை செயலர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.