சென்னை செப். 11- திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப் பணியாற்ற வேண்டும் என்று துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் அறி வுறுத்தியுள்ளார்.
ஆலோசனைக்கூட்டம்
செங்கல்பட்டு சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிளை, வார்டு, கழக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் மற்றும் இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று (10.9.2025) மறைமலை நகரில் நடைபெற்றது கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாள ரும், தமிழ்நாடு துணை முதலமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி இன்று 75 ஆண்டு களை நிறைவு செய்து பவள விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, சந்தித்த அத்தனை தேர்தலையும் வெற்றி பெற்றிருக்கிரோம். தற்போது நம்முடைய ஆட்சி பல்வேறு மாநில அரசுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நம்முடையது திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் மக் களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப் பணியாற்ற வேண்டும். எனக்கு எத்தனையோ பொறுப்புகள் கிடைத்திருந்தாலும் என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பொறுப்பு இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பு தான். பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். இளைஞரணி சார்பாக களத் தில் மட்டுமல்ல கருத்தியல் ரீதி யாகவும் பல பணிகளை மேற் கொண்டு இருக்கிறோம். வெல் வோம் 200 படைப்போம் வரலாறு. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். மறைமலை நகருக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகே மேளதாளம் முழங்க காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன், எம்.பி. செல்வம், மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் மதுசூதனன் ஆகியோர் தலை மையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 7,297 பேருக்கு ரூ.362.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.8.24 கோடியில் 13 திட்டப் பணிகளை திறந்து வைத்ததுடன், ரூ.7.43 கோடி மதிப்பில் 5 புதிய திட் டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, சட்டப்பேரவை உறப்பினர் கு.செல்வப்பெருந்தகை, ஆட்சி யர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.