ஜெயங்கொண்டம், செப்.11- மாணவர்களி டையே தமிழ்ப்பற்றையும், சமூகப்பற்றையும் வளர்க்கும் விதமாக தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு 10.9.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற்ற பேச்சு போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவி ரா.க.விசுவதர்ஷினி கலந்து கொண்டு முதல் பரிசாக ரூபாய் அய்ந்தாயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழும் பெற்றார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் தனது உரையில் துல்லியமான புரிதலை வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டைப் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.