தஞ்சை, செப். 11- தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை கலெக்டர் முருகராஜ் நகரில் அமைந்துள்ள பொதுநலத்தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் முகப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிந்தனை பலகையை 07-09-2025 அன்று காலை 9 மணி அளவில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் திறந்து வைத்து “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்று பெரியார் சிந்தனை பலகையில் எழுதி தொடங்கி வைத்தார்.
நிகழ்விற்கு பெரியார் படிப்பக தலைவர் தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.வீரகுமார் தலைமையேற்றார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குண சேகரன், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு. அய்யனார், தஞ்சை மாவட்ட தலை வர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரப் பாண்டியன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், கழக சொற்பொழிவாளர் முனைவர் வே.ராஜவேல் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி, படிப்பக உறுப்பினர்கள் ந.சங்கர், பேராசிரியர் மணிவண்ணன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் வெ. துரை, தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அ. இராமலிங்கம், ஈ.பி காலனி பகுதி செயலாளர் இரா.பரந்தாமன், ஓட்டுனர் செந்தில், மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி, மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் வண்டார்குழலி, தஞ்சை விசிறி அடிகளார், மாணவர் மகேஸ்வரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
கழகக் கொடியேற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
படிப்பகம் முகப்பில் புதிதாக அமைக்கப்பட்ட திராவிடர் கழக இலட்சிய கொடியை கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். முகப்பில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பெரியார் படிப்பக செயலாளர் இரா.வெற்றிக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.