கொள்கைப்பூர்வமான ஒரு சமூகநீதிக்காக, சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காகப் பாடுபடுவதே ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எந்தத் தலைவரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோன்று செய்ததில்லை; எட்டுத் திக்குகளில், எட்டாத உயரத்திற்கு உயர்ந்திருக்கிறார்!
‘‘பெரியார் முதலீடு’’ என்பது காலத்தை வென்ற முதலீடாகும்!
எந்தத் தலைவரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோன்று செய்ததில்லை; எட்டுத் திக்குகளில், எட்டாத உயரத்திற்கு உயர்ந்திருக்கிறார்!
‘‘பெரியார் முதலீடு’’ என்பது காலத்தை வென்ற முதலீடாகும்!
திருப்பாலைத்துறை, செப்.10 இதுவரை முதலமைச்சர்கள் பலர் இங்கிலாந்திற்குச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் அத்துணை பேரும் இவர் போன்று இல்லை. காரல் மார்க்ஸ், தமிழுக்குத் தொண்டு செய்த ஜி.யூ.போப், ‘நான், இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கக் கூடிய தமிழன்’ என்று சொன்னவர். அதேபோன்று, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தங்கியிருந்த இல்லத்தைப் பார்வையிட்டு வந்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்வையிட்டதன் மூலமாக, கொள்கைப்பூர்வமான ஒரு சமூகநீதிக்காக, சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காகப் பாடுபடுவதே ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். வேறு எந்தத் தலைவரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோன்று செய்ததில்லை. எட்டுத் திக்குகளில், எட்டாத உயரத்திற்கு உயர்ந்திருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- கொள்கைப்பூர்வமான ஒரு சமூகநீதிக்காக, சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காகப் பாடுபடுவதே ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! எந்தத் தலைவரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோன்று செய்ததில்லை; எட்டுத் திக்குகளில், எட்டாத உயரத்திற்கு உயர்ந்திருக்கிறார்! ‘‘பெரியார் முதலீடு’’ என்பது காலத்தை வென்ற முதலீடாகும்!
- செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
- 15 ஆயிரம் கோடி முதலீடு – 18 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!
- முதலமைச்சர் செய்திருக்கின்ற முதலீடு!
- மற்ற முதலீடுகளுக்கெல்லாம் காலம் உண்டு; பெரியார் முதலீடு என்பது காலத்தை வென்ற முதலீடாகும்!
- சுயமரியாதைக்காகப் பாடுபடுகின்ற ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார்!
- எட்டுத் திக்குகளில், எட்டாத உயரத்திற்கு உயர்ந்திருக்கிறார்!
- அரசியல் பொம்மலாட்டத்தை நடத்துவது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.தான்!
- கையைக் கோர்க்கச் செய்ததும் அவர்கள்தான்; கையைப் பிரித்து வைத்ததும் அவர்கள்தான்!
- ஒட்டுமொத்தமான அடிமை சாசனம் தங்களுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்!
- அ.தி.மு.க.வை முழுமையாக அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதற்கான ஏற்பாடு!
- டி.டி.வி. தினகரன், கொள்கையை மறந்து
- நீண்ட நாள்களாயிற்று!
- உள்ளங்கை நெல்லிக்கனி!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
கடந்த 8.9.2025 அன்று தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறையில் கவீ
(வீ.கருப்பையன் – க.வீரம்மாள்) இல்லத்தினைத் திறந்து வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்
வெற்றிப் பயணமா?
செய்தியாளர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு வந்திருக்கிறாரே, அது வெற்றிப் பயணமா? அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கிறார்களே, அதுபற்றி….?
தமிழர் தலைவர்: இன்றைய ‘விடுதலை’யில்கூட இதுகுறித்து ஓர் அறிக்கையை எழுதியிருக்கின்றேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வெளிநாட்டுப் பயணம் என்பது ஒப்பற்ற வெற்றிப் பயணமாகும்.
15 ஆயிரம் கோடி முதலீடு – 18 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!
ஏறத்தாழ 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டிலிருந்து, தமிழ்நாட் டிற்காகப் பெற்றதும், கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதும் – எட்டே நாள்களில் அவருடைய சாதனையாகும்.
எல்லாவற்றையும்விட ஒரு தனிச் சிறப்பு என்ன வென்றால், தமிழ்நாட்டு முதலமைச்சர், திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற நாயகரான சமூகநீதிக்கான சரித்திர நாயகரான நம்முடைய முத்துவேல் கரு ணாநிதி ஸ்டாலின் அவர்கள், முதலீட்டைப் பெற்று வருவதற்காக மட்டும் வெளிநாடுகளுக்குச் செல்ல வில்லை. முதலீட்டை செய்து வந்திருக்கிறார்.
இதைக் கேட்கும்போது, உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.
என்ன முதலீடு அதுவென்றால், அதுதான் பெரியார் முதலீடு!
முதலமைச்சர் செய்திருக்கின்ற முதலீடு!
‘‘உலகம் பெரியார் மயமாகவேண்டும்; பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கின்றார்’’ என்பதற்கு அடையாளமாக, முதலமைச்சர் செய்திருக்கின்ற முதலீடு என்னவென்றால், லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் படத்தைத் திறந்து வைத்திருக்கின்றார்.
மற்ற முதலீடுகளுக்கெல்லாம் காலம் உண்டு; பெரியார் முதலீடு என்பது
காலத்தை வென்ற முதலீடாகும்!
காலத்தை வென்ற முதலீடாகும்!
இனிவரக்கூடிய தலைமுறையினருக்குக் காலங்காலமாக சுயமரியாதை இயக்கத் தத்துவங்களை, கொள்கைகளை, பகுத்தறிவுக் கொள்கைகளை, அறிவியல் ரீதியான கொள்கைகளை, சமூக விஞ்ஞானத்தை அங்கே போதிக்கக்கூடிய பெரிய முதலீடு அது! மற்ற முதலீடுகளுக்கெல்லாம் காலம் உண்டு. இந்த முதலீடு என்பது காலத்தை வென்ற முதலீடாகும். பெரியாரை முதலீடு செய்துவிட்டு வந்திருக்கின்றார்.
எனவே முதலீட்டைப் பெற்றுக் கொண்டும் வந்திருக்கின்றார்; முதலீட்டை செய்து விட்டும் வந்திருக்கின்றார்.
இந்த முதலீடுகளுக்குக் கால எல்லை உண்டு. ஆனால், பெரியார் முதலீடு என்பது காலத்தை வென்ற தாகும்.
எனவே, தாய்க்கழகம் பூரிப்போடு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறது.
சுயமரியாதைக்காகப் பாடுபடுகின்ற ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார்!
அதுமட்டுமல்ல, இதுவரை முதலமைச்சர்கள் பலர் இங்கிலாந்திற்குச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் அத்துணை பேரும் இவர் போன்று இல்லை. காரல் மார்க்ஸ், தமிழுக்குத் தொண்டு செய்த ஜி.யூ.போப், ‘‘நான், இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கக் கூடிய தமிழன்’’ என்று சொன்னவர். அதேபோன்று, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தங்கியிருந்த இல்லத்தைப் பார்வையிட்டு வந்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் பார்த்ததின் மூலமாக, இந்த ஆட்சி கொள்கைப்பூர்வமான ஒரு சமூகநீதிக்காக, சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காகப் பாடுபடுகின்ற ஆட்சியே ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
எட்டுத் திக்குகளில், எட்டாத உயரத்திற்கு உயர்ந்திருக்கிறார்!
வேறு எந்தத் தலைவரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோன்று செய்ததில்லை. எட்டுத் திக்குகளில், எட்டாத உயரத்திற்கு உயர்ந்திருக்கிறார்.
செய்தியாளர்: செங்கோட்டையன், இன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைப் பார்க்கச் சென்றிருக்கிறாரே, அ.தி.மு.க.வினருக்கு மேலிடம் பா.ஜ.க.தானா?
அரசியல் பொம்மலாட்டத்தை நடத்துவது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.தான்!
தமிழர் தலைவர்: அரசியல் பொம்மலாட்டத்தை முழுக்க முழுக்க நடத்துவது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.தான். இதை தொடக்கத்திலிருந்தே நான் தெளிவுபடுத்திக் கொண்டு வருகிறேன். மற்றவர்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்கிறார்கள்.
சரியாகச் செய்துவிட்டீர்களா? என்று கணக்குச் சொல்வதற்காகச் சென்றிருக்கிறார்.
கையைக் கோர்க்கச் செய்ததும் அவர்கள்தான்; கையைப் பிரித்து வைத்ததும் அவர்கள்தான்!
அ.தி.மு.க.வை உடைத்ததும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான். ஆளுநரை விட்டு, கையைக் கோர்க்கச் செய்ததும் அவர்கள்தான்; கையைப் பிரித்து வைத்ததும் அவர்கள்தான்.
ஆகவே, இதன் பின்னணியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.தான் இருக்கின்றன.
இப்போதுகூட, அ.தி.மு.க.வினர் எல்லோரும் ஒன்று சேரவேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு கட்சியில் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வது என்பது உட்கட்சிப் பிரச்சினை. அதுகுறித்து நான் கருத்துச் சொல்ல விரும்ப வில்லை.
ஆனால், அந்த முயற்சியை எடுப்பது எதற்காக?
அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாகும். அந்த இயக்கம் கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும். ஏற்கெனவே பலமுறை ஆட்சியை அமைத்திருக்கின்றது. தற்போதும் அதுவே நோக்கமாக இருந்தால், சுதந்திரமாகச் சிந்தித்து, சுதந்திர ஆசையோடு ஒன்று சேரவேண்டும்.
ஒட்டுமொத்தமான அடிமை சாசனம் தங்களுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்!
முன்பு பிரித்தது யாரோ, அவர்கள்தான் இப்போது இவர்களை இணையச் சொல்கிறார்கள்.
எதற்காக இணையச் சொல்கிறார்கள்?
ஒட்டுமொத்தமான அடிமைச்சாசனம் தங்களுக்கு வந்தால், தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க. ஆட்சியை விரட்ட முடியும் என்று நினைக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சியை ஒழிப்பதற்காகத்தான் அ.தி.மு.க. இணைப்பு என்று சொன்னால், அது உண்மையல்ல.
அ.தி.மு.க.வை முழுமையாக அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதற்கான ஏற்பாடு!
ஆகவே, இது ஒருவகை அரசியல் ஒரு கட்சி பலமடைய வேண்டும் – ஒற்றுமையடைந்து ஒருங்கிணைய வேண்டும் என்று சொல்வது, மொத்தமாக உங்களை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதற்கான ஏற்பாடு என்பதுதான் உண்மை.
செய்தியாளர்: டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறாரே?
டி.டி.வி. தினகரன், கொள்கையை மறந்து
நீண்ட நாள்களாயிற்று!
தமிழர் தலைவர்: இந்தக் கேள்விக்கு நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
ஏனென்று கேட்டால், யார், யாரை ஏற்றுக்கொள்வது என்பது முக்கியமல்ல. அவர் ஏற்றுக்கொண்டால் என்ன? ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன?
உருவாக்கியது அவர்தானே! உருவாக்கும்போது, அவரிடத்தில் இருந்தார் அல்லவா! ஆகவே, அதைப்பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
இரண்டாவதாக, எனக்கு டி.டி.வி. தினகரன் மேல் இருக்கின்ற ஒரு வருத்தம் என்னவென்றால், அண்ணா இருந்திருந்தால், மும்மொழிக் கொள்கையை ஆதரித்திருப்பார் என்று சொல்லுகின்ற என்ற அளவிற்குப் போய்விட்டார்.
ஆகவே, அவர் கொள்கையை மறந்து நீண்ட நாள்களாயிற்று!
செய்தியாளர்: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்த லில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதா?
உள்ளங்கை நெல்லிக்கனி!
தமிழர் தலைவர்: அது உள்ளங்கை நெல்லிக்கனி.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.