நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலின் அர்த்த மண்டபத்தில், அர்ச்சகர்களின் எதிர்ப்பையும் மீறி அறநிலையத்துறை அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினர்.
கோயிலின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக சிசிடிவி பொருத்த அற நிலையத்துறை முடிவு செய்திருந்தது. கோவிலில் சில இடங்களில் குறிப்பாக உண்டியல் உள்ள பகுதி மற்றும் பூஜைக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் சிலைக்கு அணிவிக்க கொண்டு செல்லும் பாதைகளில் கேமரா வைப் பதற்கு அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது ஆகம விதிக்கு எதிரானது என்றும், தனிப்பட்ட வழிபாட்டுப் பணிகளில் தலையிடுவது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
ஆகம விதிப்படி கோவிலில் பசுநெய் பந்தம் மட்டுமே ஏற்ற முடியும். ஆனால் கருவறையில் கூட குளு குளு வசதி செய்துள்ளார்கள்.
இந்த நிலையில், அர்ச்சகர்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி காவல்துறை பாதுகாப்புடன் அறநிலை யத்துறை அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருத்தணி கோவிலில் முக்கிய உண்டியலுக்கு முன்பாக இருந்த காமிராவை பார்ப்பன அர்ச்சகர் ஒருவர் தனது வேட்டியால் மூடியது – சமூகவலைதளத்தில் வெளியான பின்னர், அவரும் உதவி பார்ப்பன அர்ச்சகரும் பணி இட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
‘ஆகம விதிகள், ஆகமவிதிகள்’ என்று பார்ப்பனர்கள் பூச்சாண்டிக் காட்டுகின்றனர்.
அப்படிப் பார்க்கப் போனால் கோயில்களில் எல்லாம் பழைய கால ஆகமப்படியும் சம்பிரதாயங்கள் படியும்தான் நடப்புகள் இருக் கின்றனவா என்று கேட்டால் பதில் சொல்ல அவர்கள் வசம் இருக்கும் பதில் சுழியம்தான்.
வசதி வாய்ப்புள்ள கோயில்களில் கரு வறைகள் குளிர் சாதன (ஏ.சி.) வசதிகள் செய்யப்பட்டுள்ளன! எந்த ஆகமத்தில் இது ஏற்கப்பட்டுள்ளது?
அப்படி சொல்லப் போனால் கோயிலுக்குள் மின்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாதே! மின் விளக்குகளுக்குப் பதில் தீவட்டிதானே என்று கொண்டிருக்க வேண்டும்.
திருப்பதி கோயில் உண்டியலுக்குப் பக்கத்தில் துப்பாக்கியுடன் காவல்துறையைச் சார்ந்தவர் நின்று கொண்டிருப்பது – ஆகம விதிகளையும் கடந்த கடவுள் சக்தியைக் கேலி செய்வது ஆகாதா?
திருவாரூர் தேர் வலம் வரும்போது, முன்பு எல்லாம் மரத்தாலான முட்டுக்கட்டையைத் தயாராக வைத்திருப்பார்கள். இப்பொழுது தேர்ச் சக்கரங்களில் ைஹட்ராலிக் பிரேக் பொருத் தப்பட்டுள்ளதே – எந்த ஆகமத்தில் இது கூறப்பட்டுள்ளது?
கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் இடத்தில் நாலாத் திசைகளிலும் சி.சி.டி.வி. பொருத்தப்படுவது – ஆகம விதி மீறல் மட்டுமல்ல – எண்ணுவோரின் நாணயத்தின் மீதான சந்தேகம் அல்லவா!
திருச்செங்கோடு கோயிலில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி பொருத்தப்படுவதை அர்ச்சகர்கள் எதிர்ப்பதற்குக் காரணம், தங்களின் கொள்ளைகள், சுரண்டல்கள் வெளிப்பட்டு விடுமே என்ற அச்சம்தான் காரணமாக இருக்க முடியும்!