அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 147ஆவது ஆண்டு பிறந்தநாள் பெரு விழாவை யொட்டி, மாணவ, மாணவிகளுக்கு ஓர் அரிய நல்வாய்ப்பு!
நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்க மூத்த தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களது அற்புத உரை (திருவண்ணாமலை திராவிடர் கழக மாநாட்டில் நிகழ்த்தியது)
‘‘இதோ பெரியாரில் பெரியார்!’’ என்ற தலைப்பில் சிறு நூல் வெளியிடப்படுகிறது.
அறிவு ஆசானைப் பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண் டிய அதிசய அறிவுப் பாடம் அந்த நூல்.
அதனை 10 நாட் களில் படித்து பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் ‘பெரியார் பெரும் தொண்டறம்’ எப்படிப்பட்டது என் பதை உணர்ந்து பாருங்கள்.
அதன்படி ஒரு தேர்வு. அந்த நூலிலிருந்து 10 கேள்விகள். அவற்றின் 4 கேள்விகளுக்குப் பதில் எழுதா விட்டாலும் 6 கேள்விகளுக்குரிய பதிலை ‘டெம்மி சைஸ்’ – இரண்டு பக்கங்களில் சுருக்கமாக மிகச் சிறப்பாக எழுதி அனுப்புங்கள்.
முதல் பரிசு – ரூ.2000
இரண்டாம் பரிசு – ரூ.1000
மூன்றாம் பரிசு – ரூ.500
ஆறுதல் பரிசுகள்
மூன்று முதல் 5 பேருக்கு (5 x ரூ.500)
(பதிலளிப்பதைப் பொறுத்து) – ரூ.2500
மொத்தம் – ரூ.6000
எல்லா அரசு மாவட்டங்கள் 34இலும் உள்ள மாணவர்கள், மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
அதுபோலவே ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் தனிப் போட்டி மற்றொரு நூலின்படி… (‘இனிவரும் உலகம்’)
மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகத்தவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வர்.
அந்தத் தொகைகளை விருப்புடன் ஏற்க முன் வருவோருக்குத் தலைமைக் கழகப் ‘‘பாராட்டு சான்று – நன்றி இதழ்’’ வழங்கப்படும்.
அறிவுப் புத்தகங்களாகப் பரிசுத் தொகை வெற்றி பெறுவோர்களுக்கு வழங்கப்படும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
புரவலர், பகுத்தறிவாளர் கழகம்
சென்னை
9.9.2025