கலவர பூமியானது பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலம்

2 Min Read

அரசியல்

இம்பால்,மே30 – வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. தகுதி கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசா ரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3ஆம் தேதி பேரணி நடைபெற்றது.

இதனால் மேதேயி சமுதா யத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணு வம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவ ரத்துக்கு இதுவரை 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது.

இதனிடையே, மேதேயி மற்றும் குகி சமுதாய பிரதிநிதிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாநி லத்தில் அமைதியை நிலைநாட் டுவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி இரவு பல பகுதி களில் மீண்டும் கலவரம் மூண் டது. இந்த கலவரம் 28ஆம் தேதியும் நீடித்தது. குறிப்பாக செரு மற்றும் சுக்னு பகுதிகளில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் பல்வேறு குடியிருப்புகளை தீயிட்டு கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

உரிபோக் பகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வைராக்பம் ரகுமணியின் இல் லம் தாக்கப்பட்டதுடன் அங்கி ருந்த 2 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் காவல்துறையினர் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில முதல மைச்சர் பிரேன் சிங் கூறும் போது, “பல்வேறு கிராமங் களில் புகுந்த தீவிரவாதிகள், எம்-16 மற்றும் ஏகே-47 ரக துப்பாக்கிகள் மூலம் பொது மக்களை சுட்டுள்ளனர். அங்கு ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை 40 தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக தகவல் கிடைத்து உள்ளது” என்றார்.

ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு பகுதிகளில் நடமாடும் வாகன சோதனைச் சாவடி அமைக் கப்பட்டு கண்காணிக்கப்படு கிறது. அத்துடன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாது காப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிக ளால் சுட்டனர். இதையடுத்து 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராள மான ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன” என கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் மாநிலம் இம் பாலுக்கு நேற்று மாலை சென்றார். 3 நாள் பயணமாக சென்றுள்ள அவர் அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு மேலும் பலப் படுத்தப்பட்டுள்ளது. மேதேயி மற்றும் குகி சமூகத்தினர் அமைதி காக்க வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *