சென்னை செப்.8- தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் இயங்கும் அரசு மைய அச்சகம் மற்றும் அதன் கிளை அச்சகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற் குத் தகுதியுள்ள நபர்க ளிடமிருந்து இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி ஆப்செட் மிஷின் டெக்னீசியன் பணியிடங்கள் 19 ஊதியம் ரூ19,500 – ரூ71,900 இளநிலை மின்வினைஞர் பணியிடங்கள்14 ஊதியம் ரூ.19,500 – ரூ71,900 இளநிலை கம்மியர் பணியிடங்கள் 22 ஊதியம் ரூ.19,500 – ரூ71,900 பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியன் பணியிடங்கள் 1 ஊதியம் ரூ19,500 – ரூ71,900
தகுதிகள்: உதவி ஆப்செட் மிஷின் டெக்னீசியன்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அச்சிடும் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ அல்லது அய்டிஅய் முடித்து, 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை மின்வினை ஞர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீஷி யன் டிரேடில் அய்டிஅய் முடித்து, ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை கம்மியர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக் பிரிவில் அய்டிஅய் முடித்து, ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியன்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர் டிரேடில் அய்டிஅய் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2025 அன்று 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்கு டியினர் பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. விண்ணப்பிக்கும் முறை, கடைசித் தேதி போன்ற கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.