கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.9.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

2 Min Read

* சி.பி.ராதாகிருஷ்ணன்-சுதர்சன் ரெட்டி போட்டி; நாளை குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு இன்று மாதிரி வாக்குப்பதிவு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* செப்டம்பர் 15இல் தெலுங்கானா கம்மாரெட்டியில் 42 சதவீத இட ஒதுக்கீடு வெற்றி விழாவை காங்கிரஸ் கட்சி பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு.

* என்.டி.ஏ. கூட்டணியில் சிக்கல்: என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள சிராஜ் பஸ்வான் கட்சி பீகார் தேர்தலில் அதிக இடம் கோரியுள்ளது.

* பீகாரில் நடைபெற்ற வாக்கு சிறப்பு திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: கணக்கெடுப் பாளர்கள் தரவுகளை சேகரிக்க சொந்த ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக முதலில் செயலிகள் உருவாக்கப்பட்டன, ஆனால் இப்போது கைப்பேசிகள் மற்றும் இயக்க முறைமைகளில் தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் பொருந்துமாறு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு மறு அளவீடு செய்யப்படுகின்றன.

தி டெலிகிராப்:

* அய்.அய்.டி. காரக்பூரில் உணவு விடுதியில் தனி இருக்கைகள்: “மரக்கறிஉணவு மற்றும் இறைச்சி உணவு இருக்கைகள் தனியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என அய்.அய்.டி.காரக்பூரின்  ஏற்பாடுகளுக்கு இணங்க வேண்டும்” என பிஆர் அம்பேத்கர் ஹால் ஆப் ரெசிடென்ஸில் உள்ள மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது நிர்வாகம். இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனங்களில்”உள்ளடக்கம்” குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டி விட்டுள்ளது.

தி இந்து:

* தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆண்டுகளை திரும்பிப் பார்க்கும்போது சமூக புரட்சியாளர் பெரியார் தமிழ் வார இதழான ‘குடிஅரசு’ தொடங்குவதன் மூலம், சுயமரியாதை இயக்கத்தின் முறையான தொடக்கத்திற்கு வழி வகுத்தார் என்கிறார் கட்டுரையாளர் சி.பழனிவேல் ராஜன்.

* பாபர் மசூதி இடித்து ராமர் கோவில்; அடுத்து மதுரா என்கிறது பாஜக: ஆகஸ்ட் 29 அன்று டில்லியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர், மதுரா அல்லது காசியில் நடைபெறும் எந்த கோயில் இயக்கங்களிலும் சங்கம் பங்கேற்காது; இருப்பினும், ஆர்.எஸ்.எஸ் தனது தன்னார்வலர்கள் “கோயில் நோக்கத்தில்” சேர விரும்பினால் அவர்களைத் தடுக்காது என்று தூண்டிவிடும் பேச்சு

டைம்ஸ் ஆப் இந்தியா:

* காங்கிரஸ்: ‘வாக்குத் திருட்டு’ ஆவணப்படம் குறித்த எஸ்எம்எஸ் அனுப்ப டிராய் மறுப்பு:  மகாராட்டிராவில் 2024 தேர்தல்கள் குறித்த ஆவணப்படம் தொடர்பான தங்கள் எஸ்எம்எஸ் பிரச்சாரத்தை டிராய் தடுத்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

 – குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *