திண்டுக்கல், செப். 8- மேனாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.
10 நாட்கள் கெடு
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த செங்கோட்டையன், அ.தி.மு.க.வை சேர்ந்த அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சி பதவிகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
சர்வாதிகாரத்தின் உச்சம்
இந்த நடவடிக்கைக்கு கட்சியினர் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இதற்கிடையே மேனாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அளித்த நேர்காணலில் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதற்காக செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றார்.