செலான் மோசடிகள் காவல்துறை எச்சரிக்கை!

1 Min Read

சென்னை, செப். 7– தமிழ்நாட்டில் இ-செலான் மோசடி அதிகம் நடைபெறுவதாக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சமீபகாலமாக 2 வகையான சைபர் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. வாகனங்கள் விதிமுறை மீறினால் இ-செலான்களை வாட்ஸ்அப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. ஆனால், மோசடி கும்பல் வாட்ஸ்-அப்மூலம் போலி இ- செலான்களை அனுப்புகிறது.

இதன்மூலம் மோசடி நபர்கள், பொதுமக்களிடம் வங்கிக் கணக்குகளின் விவரங்களையும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ரகசிய எண்ணையும் பெற்று பணத்தை அபகரிக்கின்றனர். பொதுமக்கள் இப்படிப் பட்ட மோசடியில் சிக்காமல் இருக்க, அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களுக்கு சென்று தங்களது வாகனம் போக்குவரத்து விதிமுறையில் ஈடுபட் டுள்ளதற்காக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதா என பார்த்து தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும்.

இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதே போல சைபர் குற்றத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு உதவுவதுபோல நாடகமாடி பணத்தை பறிக்கும் மற்றொரு மோசடி சம்பவங்களும் நடைபெறுகிறது. இதற்காக மோசடி நபர்கள், சமூக ஊடகங்களில் சைபர் உதவி மய்யம் என்ற பெயரில் போலியான விளம்பரம் செய்து, பொதுமக்களை தொடர்பு கொள்ள வைக்கின்றனர்.

பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது, மோசடி நபர்கள் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள், சட்ட ஆலோசகர்கள் எனக்கூறி பேசுகின்றனர். சைபர் குற்றத்தில் இழந்த பணத்தை மீட்க கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி பணத்தை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விடுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் சைபர் குற்றம் தொடர்பாக புகார் அளிக்க, சைபர் குற்றப்பிரிவை 1930 என்ற அதிகாரபூர்வ இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். தெரியாத செல்போன் எண்கள், வாட்ஸ்-அப், சமூக ஊடகங்கள் வாயிலாக சட்ட ஆலோசகர், சைபர் குற்றப்பிரிவு அதிகாரி எனக் கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *