எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டு பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

1 Min Read

அரசியல்

சென்னை, மே 31 – எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டு பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட் டம் ஜோயல்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (வயது34). திரு மணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள் ளன. இவர்கள் குடும்பத் துடன் சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக் கத்தில் வசிக்கின்றனர். முத்தமிழ்செல்வி தானும் சாதிக்க வேண்டுமென்று, பல்வேறு மலைகளில் கண்களை மூடியவாறு ஏறியும், இறங்கியும், வில் வித்தையிலும் பல சாத னைகளை புரிந்துள்ளார். எவரெஸ்ட் சிகரம் ஏறு வதற்கு பயிற்சி மேற் கொண்டார். ஆனால், பொருளாதார வசதியில் லாமல் தவித்த நிலையில் தமிழ்நாடு அரசும், தன் னார்வ அமைப்புகளும் நிதியுதவி வழங்கின. கடந்த 23ஆம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். தமிழ்நாட்டில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்ற முத்தமிழ்செல்வியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.

இந்நிலையில், நேற்று (30.5.2023) டில்லியில் இருந்து விமானம் மூலம் முத்தமிழ்செல்வி சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாக வர வேற்பு அளித்தனர். அப்போது அவர் செய்தியா ளர்களிடம் கூறும் போது, “எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டுமென மூன்று ஆண்டுகளாக திட்டமிட் டிருந்தேன். அதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வந்தேன். எனக்கு உதவி செய்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,எனது பயிற்சி யாளர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் நாட்டில் இருக்கும் பெண் களால் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. அனைத்து உயரமான சிகரங்களை ஏற வேண்டும் என்பதுதான் என் அடுத்த இலக்கு” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *