பிரிட்டானிய கூட்டமைப்பு நாடான ஸ்காட்லாந்தில் விநாயகர் சதுர்த்தி கொண் டாட்டம், அங்குள்ள மராட்டி யர்கள் இந்தியாவில் இருந்து இசைக் குழுவினர்களை அழைத்து வந்து சாலைகளில் ஊர்வலமாக சென்றார்கள்.
மும்பையைப் போன்று பெரிய சிறிய விநாயகர் சிலைகள் இங்கு இல்லை, அங்குள்ள ஹிந்து மக்களே சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பது சூழல் சீர்கேடு.
ஆகவே விநாயகர் சதுர்த்தி அன்று மராட்டியர்கள் மும்பையில் இருந்து கலைஞர்களை வரவழைத்து கிளாஸ்கோவின் இந்தியா டவுன் சாலையில் ஊர்வலமாகச் செல்வார்கள். அவ்வளவுதான்.
அயர்லாந்தில்…
ஸ்காட்லாந்தின் உறுப்பு நாடான அயர்லாந்தின் பிரதமர் ஒரு இந்தியர். அதிலும் கிறிஸ்தவர், கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் பெயர் லியோ வரத்கர். மராட்டி, ஹிந்தி போர்ச்சுகிசியம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்த ரோமன் கத்தோலிக்க மத போதகராக வாழ்க்கையைத் துவங்கி பேராசிரியராக பணியாற்றி, பின்னர் அரசியலில் வந்து தற்போது பிரதமராக உள்ளார்.
அயர்லாந்திலும் மராட்டியர்கள் விநாயகர் சதுர்த்தியை அமைதியான முறையில் சிலை எதையும் எடுத்துச்செல்லாமல் கொண்டாடுகின்றனர்.
இந்தியாவில்…
ஆனால், இங்கே கிறிஸ்தவ தேவாலயம், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு முன்பாகச் சென்று இரண்டு மதத் தினரையும் மிகவும் மோசமான சொற்களால் வசை பாடினால்தான் விநாயகர் ஊர்வலம் நிறைவு பெறுமாம்!
அங்கே கிறிஸ்தவ மத நாடு முழுமையாக அனுமதி அளிக்கிறது. இங்கே தேவாலயத்தில் வழிபட்டால் கூட சங்கிக்கூட்டம் ஓடிச்சென்று மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்துகிறது.
இதுவரை வட இந்தியாவில் நடந்தது. இந்த ஆண்டு சென்னையிலும், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மசூதிகள் உள்ள பாலத்தின் மீது திரை வைத்து மறைத்துள்ளார்கள்.
திடீரென்று, மசூதிகள் மீதான இந்தத் திரைமறைப்பு ஏன் என்று தெரியவில்லை.