தி.மு.க.வை அசைக்க முடியாது: அமித்ஷாவுக்கு வைகோ பதிலடி
திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று சமீபத்தில் அமித்ஷா கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய வைகோ, இமயமலையை கூட அமித்ஷா அசைத்துவிடலாம், ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். எண்ணற்ற பேர் தன் உயிர்களையும், ரத்தத்தையும் சிந்தியுள்ள திமுகவை இவ்வாறு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.
சோனியா காந்தி பற்றி மோடி அவதூறாகப் பேசினார்: தேஜஸ்வி
யாருடைய தாயாரையும் அவதூறாக பேசக்கூடாது என்று தேஜஸ்வி தெரி வித்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் பற்றி காங்., கட்சியினர் அவதூறாக பேசியதற்கு எதிராக இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, சோனியா காந்தி குறித்து மோடி அவதூறாக பேசியதாகவும், நிதிஷ் குமாரின் தேசிய முற்போக்குக் கூட்டணி பற்றி கேள்வி எழுப்பியதாகவும் கூறி சாடியுள்ளார். இது தற்போது விவாதமாகியுள்ளது.
உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: புடின்
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு வந்தால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என புடின் தெரிவித்துள்ளார். இருள் நிறைந்த இடத்தில் ஒரு வெளிச்சம் இருப்பதாக நினைப்பதாகவும், உக்ரைன் விவகாரத்தில் அமைதி எட்டப்படாவிட்டால், அதை ராணுவ ரீதியாக தீர்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுவரை ஜெலன்ஸ்கி உடனான நேரடி சந்திப்பை புடின் புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நாய் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?
நாய்கள் கடித்துவிட்டால், என்ன செய்ய வேண்டும் என மருத்துவர் சொல்லும் அறிவுரையை கேளுங்கள் காயம் ஏற்பட்ட இடத்தை 15 நிமிடங்களாவது ஓடும் நீரில் காயத்தை கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து, 5 டோஸ் கொண்ட PEP எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். உடனடியாக இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமானது. தடுப்பூசியை போட தாமதித்தால், அது உயிரிழப்பு வரை செல்லலாம்.