பெரியார் கல்வி நிறுவன மாணவர் சிறந்த வீரர் விருதை வென்றார்

0 Min Read

திருச்சி, செப். 4– திருச்சி மாவட்டம் டக்அவுட் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முத்தரசநல்லூர் கால் பந்தாட்டக் கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டி கடந்த 31.08.2025 அன்று நடைபெற்றது.

இப்போட்டியில், 14 வயதிற்கு உட்பட்டோ ருக்கான பிரிவில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின், கால் பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டனர்.

இதில், பள்ளியின் 6ஆம் வகுப்பு மாணவர் இ.ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி “போட்டியின் சிறந்த வீரர்” விருதை வென்றார். சாதனை மாணவனைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *