செங்கல்பட்டு – மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-
வில்லிவாக்கம்
வடசென்னை மாவட்ட கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு – கழக மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் 30.8.2025 அன்று, மாலை 6 மணிக்கு வில்லிவாக்கம் – வடக்கு செங்குன்றம் சாலை – ராஜமங்கலம் சாலை சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பாடகர் அறிவுமானன் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பற்றியும், மூடநம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை இயக்கம் குறித்தும் பாடல்களைப் பாடினார்.
எழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கொளத்தூர் பகுதி தலைவர் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார். செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஓட்டேரி ந.கார்த்திக் தொடக்க உரையாற்றினார்.
வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், துணைத் தலைவர் நா.பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி, திராவிட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், இளைஞரணி துணைச் செயலாளர் த.பர்தின், துணைத் தலைவர் பா.பார்த்திபன் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி, வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், ச.இராசேந்திரன் ஆகியோர் சுயமரியாதை இயக்கத்தின் பணிகளைப் பற்றியும், மறைமலைநகர் – கழக மாநில மாநாடு பற்றியும் விளக்கிப் பேசினர்.
நிறைவாக கழக கிராமப்புற பிரச்சாரச் செயலாளர் முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,
நூற்றாண்டு காண்கின்ற சுயமரியாதை இயக்கம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆதாரங்களோடு விளக்கிப் பேசினார். அத்கைய பெரியார் மண்ணில் 35 நிமிடத்தில் ஒரு மாநாட்டையே நடத்தி முடிக்கின்ற விந்தை நடந்துள்ளதையும் குறிப்பிட்டு அந்தக் கட்சியையும், அதன் அடையாளம் என்ன என்பதையும் எடுத்துக் கூறினார். ‘தேவதாசி ஒழிப்பு’ சட்டமான வரலாற்றை விவரித்து, பெண்ணடிமை ஒழிப்புக்கு தந்தை பெரியார் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை, மக்கள் நலத் திட்டங்களை வரிசைப்படுத்தி குறிப்பாக பள்ளிச் சிறார்களுக்குரிய காலை உணவு, மதிய உணவுத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டு அம்மாணவர்களின் எதிர்காலம் செழிப்பாக அமையக்கூடிய வாய்ப்பினையும் எடுத்துக் கூறினார்.
அத்தகைய திராவிட மாடல் அரசுக்கு மிகப் பெரிய பாதுகாவலராக இருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டுதலில் அதே ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்ய வேண்டியதே தமிழர்களின் தலையாய கடமை என வலியுறுத்தித் தனது உரையை நிறைவு செய்தார்.
வில்லிவாக்கம் பகுதி தி.மு.க. செயலாளரும், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான கூ.பி.ஜெயின், மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ம.பூவரசன், கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராஜ், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் கண்மணி துரை, வில்லிவாக்கம் சி.காமராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன், பெரம்பூர் வே.ஜோதி ராமலிங்கம், க.கவிதா, தானியா, அமைந்தகரை மதன்குமார், கோகுலகிருட்டிணன், த.ராஜா, ச.விஷ்ணு மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் கி.இராமலிங்கம் நன்றி கூறினார்.
நீடாமங்கலம்
17.08.25 மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் நீடாமங்கலம் நகரத்தில் தந்தைபெரியார் சிலை அருகில் செங்கல்பட்டில் 04.10.2025 அன்று நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டினை விளக்கி மாநாட்டு விளக்க பரப்புரைக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு. ஒன்றியச் செயலாளர் ச.அய்யப்பன். வரவேற்புரை ஆற்றினார்..மாவட்டக் காப்பாளர் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. ப.சிவஞானம். தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், ப.க. மாநிலச் செயலாளர் .சி.இரமேஷ். ப.க. மாவட்டச் செயலாளர் த.வீரமணி, மாவட்ட து.தலைவர்.ந.இன்பக்கடல், மன்னை ஒன்றிய தி.க. தலைவர் . மு.தமிழ்ச்செல்வம்,.மாவட்டதுணைச்.செயலாளர் வி.புட்பநாதன், நீடா. ஒன்றியத் தலைவர் .தங்க .பிச்சைக்கண்ணு, மாவட்ட ப.க.அமைப்பாளர் இரா.கோபால்,மாவட்ட இளைஞரணி தலைவர் கோரா.வீரத்தமிழன், ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் கூட்டத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார், கழகப் பேச்சாளர் முனைவர்.வே. இராஜவேல் சுயமரியாதை இயக்கம் கடந்து வந்த வரலாற்றுச் சுவடுகளை எடுத்துக் கூறி தொடக்கவுரை ஆற்றினார்.
தொடர்ந்து மாநிலது. பொதுச் செயலாளர் .ச. பிரின்சு என்னாரசு பெரியார், சுய மரியாதை இயக்க நூற்றாண்டில் நாம் அடைந்த வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி நீண்ட உரையை சிறப்புடன் வழங்கினார்.
திராவிடர் கழக இளைஞரணி நகர தலைவர் இரா.அய்யப்பன், கழகத் தோழர்கள் வடுவூர் உலகநாதன், ஆசையொளி, மன்னார்குடி நகர இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், நல்லிக்கோட்டை நல்லதம்பி, நீடா.புலவர்.செந்தில் பகுத்தறிவாளர்கள் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் க.முரளி, புலவர்.செல்வம், மாணவர் கழக தோழர்கள் க.கதிர்வேல், மாணவர் கழக மாவட்ட செயலாளர் ச.சாருகான், பூவனூர் சந்திரசேகரன், கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், மன்னை சித்து, முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் சு.அம்பிகாபதி, மற்றும் பகுத்தறிவு ஊடகத்துறை மாநில தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சாவூர் குணசேகரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . இறுதியில் நகரச்செயலாளர் கி.இராஜேந்திரன் அவர்கள் நன்றி கூறினார்கள்.
திருவண்ணாமலை
18.08.2025 திங்கள் மாலை 5.00 மணிக்கு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் மு.க. இராம்குமார் மாவட்டச் செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பா.வெங்கட்ராமன் இணைப்புரை ஆற்றினார். அண்ணா சரவணன் விளக்கவுரை ஆற்றினார்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கு.பஞ்சாப் சரம், கோ.தேவராசு பூ.சம்பத், இராஜேந்திரன், சுரேஷ் தவான், சசிக்குமார், தென் பென்னை சமவெளி வெற்றிமுரசு, தண்டராம்பட்டு தலைவர் மாசிலாமணி, தி.மு.க,பு. இ முண்ணனி, பு.இமா. முண்ணனி,ம.தி.மு.க,வி.சி.க, நண்பர்கள் சங்கம், த.வி.முன்னணி மாவட்ட தலைவர் செயலாளர்கள் உரை நிகழ்த்தினர். அண்ணாதாசன் நன்றி கூறினார்.