சிவகங்கை, ஜூன் 1- சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 29.05.2023 – திங்கள் கிழமை மாலை 4 மணி அளவில் மாவட்ட தலைவர் இரா. புகழேந்தியின் ‘‘யாழகம்” இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா. புகழேந்தி தலைமை தாங்கினார்.
திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, மாநில இளைஞரணி துணை செயலாளர் இராஜவேல் சிறப்புரை ஆற்றினர்.
இக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தின் சார்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்: 1) ஈரோடு பொதுக் குழு தீர்மானத்தின் படி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது. 2) கிளைக் கழகங்கள் முழுவதும் கழகக் கொடி ஏற்றி, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது. 3) விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, ஆகிய கழக பகுத்தறிவு ஏடுகளை மக்களிடையே பரப்புவது, 4) சிவகங்கை கல்லூரி சாலைக்கு, “கவிஞர் மீரா சாலை” எனப் பெயரிட ஆணை பிறப்பித்த சிவகங்கை நகர் மன்ற தலைவருக்கு பாராட்டு
தீர்மானங்களை வழிமொழிந்து மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், மாவட்ட செயலாளர் பெரு.இராசாராம் அவர்கள், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் வேம் பத்தூர் க.வி. செயராமன், மாவட்ட விவசாய அணி தலைவர் பெரிய கோட்டை சந்திரன், பிரமனுர் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஒக்குர் தெய்வேந்திரன், மதகுபட்டி பச்சை முத்து, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மீனாட்சி அம்மாள் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் வே.கார்த்திகா ராணி கலந்துகொண்டார்.