2021 திமுக தேர்தல் வாக்குறுதிகளில், மாதந்தோறும் மின் கணக்கீடும் உண்டு. ஆனால், தற்போது வரை 2 மாதங்களுக்கு ஒரு முறையே மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் நெருங்கும் சூழலில், மிக விரைவாக பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது