லண்டன், செப். 2- நோயாளிகளின் இதயத் துடிப்பைக் கேட்டு இதய நோய்களைக் கண்டறியும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்டெதஸ் கோப் சாதனம் ஒன்றை ஆய்வாளர்கள் உருவாக் கியுள்ளனர். இந்த சாதனம் இதய நோய்களை மிகத் துல்லியமாகக் கண்டறியும் ஆற்றல் கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
லண்டனில் சுமார் 12,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த ஏஅய்(AI) ஸ்டெ தஸ்கோப் பயன்படுத்தப் பட்டது. இதில், நோயா ளிகளின் இதயத் துடிப்பில் உள்ள மிகச் சிறிய வித்தியாசங்கள் ஆராயப் பட்டன. இந்தத் தகவல்கள் பின்னர் மேகக் கணிமைத் தளத்தில் (Cloud Computing platform) சேமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிற நோயாளிகளின் தகவல் களுடன் ஒப்பிட்டுப் பார்க் கப்பட்டன.
இந்த ஒப்பீட்டின் மூலம், நோயாளிகளுக்கு இதய நோய்கள் இருப்ப தற்கான சாத்தியக்கூறுகள் துல்லியமாகக் கணிக் கப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரி வித்துள்ளது.
இந்தக் கருவி, மருத் துவர்கள் நோயைக் கண்டறிவதில் பெரும் உதவியாக இருக்கும் என்றும், ஆரம்ப கட்டத் திலேயே நோய்களைக் கண்டறிவதன் மூலம் சிகிச்சையை விரைவாகத் தொடங்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எதிர் காலத்தில் மருத்துவத் துறையில் இந்த ஏஅய் (AI) ஸ்டெதஸ்கோப் ஒரு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.