கீவ், செப். 2- உக்ரைனின் நாடாளு மன்ற மேனாள் தலைவர் அண்ட்ரீ பாருபி (Andriy Parubiy) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உறுதிப்படுத் தினார்.
உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் லுவீவ் (Lviv) அந்த நாட்டின் நாடாளுமன்ற அவைத்தலைவர் 54 வயதான அண்ட்ரீ பாருபி, ஆகஸ்ட் 30 அன்று சுட்டுக் கொல் லப்பட்டார் 2016 ஏப்ரல் முதல் 2019 ஆகஸ்ட் வரை உக்ரைனின் நாடாளுமன்ற அவைத்தலைவராகப் பதவி வகித்த இவர் தற்போது விவசாயம் தொடர்பான பணிகளைச் செய்துவருகிறார்.
அவைத்தலைவர் கொலை தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கி கூறுகையில், கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித் துள்ளதாகவும், கொலைக் கான அனைத்து விவரங் களையும் கண்டறியும் வகையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித் தார்.
மேலும் இவரது கொலைக்கும் ரஷ்யா உடனான போருக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.
இந்த அவைத் தலைவர் கொலை தொடர் பான செய்தி நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.