தமிழ்நாட்டில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் வரும் செப்.1 முதல் 2026 ஆக. 31 வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
குரங்கு கையில்
ரூ.500 நோட்டுகள்:
கொட்டிய பணமழை
குரங்கு சேட்டைகள் வேடிக்கையாக இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் கோபத்தை ஏற்படுத்துகிறது. உ.பி.யின் அவுரையா பகுதியில், ரோகிதாஷ் என்பவரின் பைக்கில் இருந்த ரூ.80,000 ரூபாயை குரங்கு ஒன்று எடுத்து வீச, பணமழை கொட்டியுள்ளது. சிதறிய பணத்தை மக்கள் அள்ளிக் கொண்டு ஓடினர். இதில், ரோகிதாஷ் ரூ.27,000 இழந்துள்ளார். அறியாமல் குரங்கு சேட்டை செய்துவிட்டது என்றாலும், பணத்தை அள்ளிக்கொண்டு ஓடியவர்களை என்ன சொல்வது?