சீறும் சர்ப்பம்!

2 Min Read

கேள்வி: ஏழை மாணவர்கள் விடுதி, இனி, ‘சமூகநீதி விடுதிகள்’ என அறிவித்துள்ளாரே, முதல்வர் ஸ்டாலின்?

பதில்: அதெப்படி… இப்படி பெயர் மாற்றப்பட்டுவிட்டால், விடுதிகளின் உள்கட்டமைப்பும், உணவு தரம் உயர்ந்துவிடுமோ? அவ்விஷயங்களில் எல்லாம் நீதி கிடைக்காமல், எந்த சமூகநீதியும் பயனளிக்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

– ‘தினமலர்’, வார மலர்

சமூகநீதி என்ற சொல்லைக் கேட்டாலே இந்தப் பார்ப்பனர்களுக்குப் பச்சை மிளகாய்ப் போல் சுள்ளென்று உரைத்துவிடுகிறது.

ஆமாம், சமூகநீதி என்ற ஒன்றுதானே அவாளின் ஆதிக்கச் சிண்டை அவர்களே அறுத்துக் கிராப்பு வெட்டும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

திறந்த மார்பில் பூணூலை முறுக்கிவிட்டு ஆணவ நடை போட்டவர்களின் திமிரை ஒடுக்கியது.

எப்பொழுதும் கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்கத் துப்பு இல்லாமல், சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வேறு ஒரு பிரச்சினைக்கு மந்தியாகத் தாவி விடுவது அவாளின் குயுக்தி.

கேள்வி: தமிழ் மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்?

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்.

– ‘தினமலர்’, வார மலர், 13.6.2014

‘‘தமிழகப் பொதுப் பணித்துறை செயலாளர் ராமசுந்தரம்; தமிழகத்திற்குக் கருநாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும்; மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். கருநாடக அரசு குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாததால், இந்த ஆண்டு காலதாமதமாக கடந்த 7 ஆம் தேதிதான் திறந்துவிட்டோம்.

டவுட் தனபாலு: அதனால் என்னங்க.. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறந்துவிட்டோமோ இல்லையா? அதுக்கப்புறம் டெல்டா பகுதிகள்ல முப்போகம் விளையாதா என்ன?

– ‘தினமலர்’, 18.8.2009

கேள்வியும், தகவலும் ஒன்றாக இருக்கும் ‘தினமலர்’ திரி நூல் கூட்டத்தின் கன்னத்தில் அடக்கி வைத்திருக்கும் திராவிட எதிர்ப்பு என்ற நஞ்சைப் பேனாவில் மய்யாக ஊற்றி, தன் பார்ப்பன விரியன் வேலையைக் காட்டிக் கொண்டு விடும்.

சமூகநீதி என்றாலே ஏன் கோபம் வெடித்துக் கொண்டு வெடிக்கிறது இந்தக் கூட்டத்துக்கு?

சமூகநீதி என்றால், அனைவரும் சமத்துவம் என்ற கொள்கை உடையதாயிற்றே! பிர்மா என்ற ஆண் கடவுளின் நெற்றியில் பிறந்ததாகக் கூறிக் கொள்ளும் இந்தக் கூட்டம், அதை ஏற்றுக்கொள்ளுமா, என்ன?

புரிந்துகொள்வீர், பார்ப்பனரை!

 – மயிலாடன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *