ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்
தந்தை பெரியார் படத்திறப்பு!
M.K.Stalin @mkstalin
Periyar goes global! “Oppression is my enemy” the rallying cry of Periyar now resonates at #Oxford. Marking the centenary of the #SelfRespect Movement, I will unveil Thanthai Periyar’s portrait at the University of Oxford on 4th September and release two books that chronicle its hundred year journey and living legacy. Before an assembly of international scholars, the movement that set ablaze caste tyranny and burned down barriers of gender in Tamil Nadu will be placed in dialogue with struggles worldwide for dignity, equality and freedom. #Periyar’s ideals of equality are not bounded by borders, they belong to humanity as a whole.
உலகமயமாகிறார் பெரியார்! ‘‘ஆதிக்கம்தான் என் எதிரி’’ என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்! சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற #Oxford பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெரு மக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!