சென்னை, ஆக.29- தமிழ்நாட்டின் 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்கு தேசிய அங்கீகார சான் றிதழ் வழங்கப்பட்டு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வாழ்த்து
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் தேசிய தர நிர்ணய வாரிய சான்றிதழ் பெற்ற 5 அரசு மருத்துவமனை டீன்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். மேலும், இந்தியன் வங்கி சார்பில் சி.எஸ். ஆர். நிதி பங்களிப்புடன் ரூ.15 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணி யன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. ஒன்றிய அரசின் சார்பில் தற்போது தேசிய தர நிர்ணய வாரிய சான்றிதழ் தமிழ் நாட்டில் சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
விருதுகள்
மருத்துவ மேலாண்மை நோயாளி களின் பாதுகாப்பு, தரமான சிகிச்சை, மனிதவள மேலாண்மை, தொற்றுக்கட்டுப்பாடு உள்பட 10 தர நிலைகள் அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் முதன்முறையாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தரப்பட்டுள்ளது. கடந்த 4½ ஆண்டு களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒன்றிய அரசு சார்பில் 1600 விருதுகள் கிடைத்துள்ளது. இந்த விருதுகளில் இன்று கிடைக்கப் பெற்றுள்ள 5 அரசு மருத்துவக் கல்லூரிக்கான சான்றிதழ்கள் பெரிய மகுடம் போன்றவை. மேலும், இந்த மருத்துவமனைக்கு சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் இந்தியன் வங்கி சார்பில் ரூ.15 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
ஆம்புலன்ஸ்மீது தாக்குதல்
சமீபத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கதக்கது. அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு வந்தவர்களில் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது, அவரை காப்பாற்ற சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து, அதன் ஓட்டுந ரையும் பெண் ஊழியரையும் தாக்கியுள்ளனர். இது ஒரு மனிதநேயமற்ற செயல்.இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைசார்பில் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் தேரணிராஜன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மருத்துவர் அரிகரன் உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.