திருச்சி, ஆக.28- குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பி.தேவதர்சிலி இரண்டாம் இடத்தையும் ஆர்.ரேஸ்மா மற்றும் கே.நிஸ்மா காத்தூன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
சிலம்பம் போட்டியில் எஸ்.யாசிகா, ஜெ.ஸரிஷா, எஸ்.நிரஞ்ஜனா, எஸ்.ரோசிணி ஆகிய நான்கு பேர் முதல் இடத்தையும், எஸ்.நேத்ரா இரண்டாம் இடத்தையும், எஸ்.தன்சிகா, எம்.யு.வைஷ்ணவி, எம்.ரிசித்தா ஆகிய மூன்று பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிலம்பம் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற நான்கு மாணவிகளும் மாவட்ட அளவில் நடைபெறும் சிலம்பப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
குறுவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு நம் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
தடகளப் போட்டியில் எஸ்..சங்கமித்ரா என்ற மாணவி 100 மீ மற்றும் 200 மீ ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 400 மீ தொடர் ஓட்டத்தில் நம் பள்ளி மூன்றாம் இடத்தை பெற்றது.
ஆர்.சன்சி என்ற மாணவி வட்டு எரிதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.
எஸ்.சங்கமித்ரா மற்றும் ஆர்.சன்சி ஆகிய இருவரும் மாவட்ட அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.