கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2 Min Read

28.8.2025

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமைப் பயண பேரணியில் ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: தேர்தல் ஆணையத்தை ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள் என குற்றச்சாட்டு  65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. இதைவிட பயங்கரவாதம் இருக்க முடியுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்த டிரம்ப் மோடிக்கு 24 மணி நேரம் கொடுத்தார், அவர் 5 மணி நேரத்தில் கீழ்ப்படிந்தார்’ என ராகுல் காந்தி கிண்டல்.

* ஒடிசாவில் 50% க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப் பாடங்களைப் புரிந்து கொள்ள தனியார் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்: நகர்ப்புறங்களில் ஒரு மாணவருக்கு தனியார் பயிற்சிக்காக சராசரியாக ஆண்டுக்கு ரூ.10,899 செலவாகும்; கிராமப்புறங்களில், இது ரூ.3,547 ஆகும் என ஒன்றிய அரசு தகவல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘6 மாதங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் படும்’: ராகுல் காந்தி தனது பீகார் பேரணியின் போது தனது “வோட் சோரி” குற்றச்சாட்டை தீவிரப்படுத் தினார், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் “குஜராத் மாதிரி” மூலம் தேர்தல்களை கையாண்டு வாக்கு திருட்டு செய்ததாக குற்றம் சாட்டு. மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் தேர்தல் மோசடிக்கான ஆதாரங்கள் இருப்பதாக பேச்சு. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளை தேர்தல் ஆணையம் தூண்டியதாக கூறப்படுகிறது.

தி டெலிகிராப்:

* ‘முழு தேர்தல் இயந்திரமும் ஊழல் நிறைந்தது’: ராகுல் காந்திக்கு முன்பு, மகாராட்டிராவின் மேனாள் எம்.எல்.சி. பலராம் பாட்டீல், பன்வெல் மற்றும் அதை ஒட்டிய தொகுதிகளில் இருந்து 85,211 வாக்காளர்களின் பெயர்கள் நகல் அல்லது மும்மடங்கு கூட செய்யப்பட்டதாகக் கண்டறிந்ததாக குற்றச்சாட்டு.

* அய்ஏஎப், ரபேல் ஜெட் விமானங்களை இழந்ததா? போர் நிறுத்தத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் பேசியதாகக் கூறி டிரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு.

* ‘பிரதமர் மோடியின் அன்புள்ள நண்பர் டிரம்பின் வரிகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன’: அமெரிக்காவின் அதிக வரி உத்தரபிரதேசத்தில் ஏற்றுமதியாளர்களை ‘சரிவின்’ விளிம்புக்குத் தள்ளி யுள்ளது என்றும், பாஜக அரசு தொழில்கள் மற்றும் வேலைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *