கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

27.8.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* காலை உணவு திட்டத்தால், குழந்தைகளின் உடல்நலம் மேம்பட்டுள்ளது. கற்றல் திறன் அதிகரித்துள்ளது. மாணவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்வது குறைந்துள்ளது. பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது – முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

* மசோதா குறித்து ஆளுநர் எப்போது வேண்டுமானா லும் முடிவு எடுக்கலாம் என்பது பிரச்சினைக்குரியது, – உச்ச நீதிமன்றம் கருத்து.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தனிநபர் தாக்குதலே ஆர்.எஸ்.எஸ்.-சின் வாடிக்கை; காந்தியார் மீது அவதூறு பரப்பியவர்கள் என ராகுல் காட்டம்.

* உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற ரேவந்த் தலைமையிலான அரசு முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகாரப் பயணம் பீகார் அரசியலை எவ்வாறு மாற்றுகிறது? அடையாளம் மட்டும் என்ற  நிலையில் இருந்து உரிமைகள்-வளர்ச்சி சட்டத்திற்கு மாற்றுவதன் மூலம், ராகுல் காந்தி காங்கிரஸை சமூகக் கூட்டணிகளில் பங்கேற்பாளராகவும், ஜனநாயகம் மற்றும் நலனுக்கு உத்தரவாதம் அளிப்பவராகவும் மாற்றிட முயல்கிறார் என்கிறார் கட்டுரையாளர் பிரோஜ் பிஸ்வாஸ்.

* உச்ச நீதிமன்ற நீதிபதியாக குஜராத் நீதிபதி பஞ்சோலிக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு: கொலிஜியம் முடிவுக்கு நீதிபதி நாகரத்னா எதிர்ப்பு. நீதிபதி பஞ்சோலி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இருந்து பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு வழக்கமான முறையில் மாற்றப்படவில்லை. ரகசியமாக பஞ்சோலி பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. எனவே அவரது நியமனம் சரியல்ல என நீதிபதி நாகரத்னா கவலை தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் திருத்த இயக்கத்தை எதிர்க்கும் தீர்மானத்தை ஜார்கண்ட் சட்டமன்றம் நிறைவேற்றியது

தி இந்து:

* 2014 மக்களவைத் தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்தது: ராகுல் குற்றச்சாட்டு. பீகாரில் உள்ள சுபாலில் நடந்த ‘வாக்காளர் அதிகாரப் பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தி வத்ரா, ஏ. ரேவந்த் ஆகியோர் ராகுலுடன் பங்கேற்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘பாஜக அமைச்சர் யாராவது கைது செய்யப் பட்டாரா?’ கபில் சிபல் கேள்வி. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன் படுத்தியதாக கூறப்படும் நிகழ்வுகளை மேற்கோள் காட்டி அரசாங்கத்தின் “அரசியலமைப்பு ஒழுக்கம்” வாதத்தை கபில் சிபல் விமர்சனம்.

தி டெலிகிராப்:

*‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

 – குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *